இம்மிகிரேசன் வரிசை சுமார் 30 நிமிடம் நகர்ந்தது .அதிகாரி பாஸ்போர்ட் எல்லாம் சரிபார்த்து ஓகே ஆன பின் சிரித்து கொண்டே ,நல்லா வொர்க் பண்ணி டார்கெட் முடிக்க வேண்டியது கம்பெனி செலவுல வெளிநாடு கிளம்பவேண்டியது அப்படிதான? என்றார்.நானும் சிரித்துகொண்டே அமாம் என்றேன் .ஓகே போய்ட்டு வாங்க என்று அனுமதி கொடுத்தார் .(தாய்லாந்தில் மட்டும் ஸ்பாட் விசா கிடைக்கும் .அங்கேபோய் சேர்ந்த பின் விசா வாங்கிகொள்ளலாம் .ஒரே ஒரு கேள்வி மட்டும் முக்கியமாக அங்கே கேட்கப்படும் ."எங்க நாட்டில் எவ்வளவு செலவு செய்வீர்கள் ".குறைந்த பட்சம் 50000/- rs என்று புளுகி வையுங்கள் .)
விமானம் புறப்பட அயத்தமனதும் அறிவுப்பு வரும் ,எந்த பிளாக் ,எந்த நம்பர் எல்லாம் சரிபார்த்து நம் கை பை சோதனைக்கு பின் உள்ளேபோய் அமர வேண்டியது தான் .(முகத்தையும் ,பரபரப்பையும் வைத்தே இவன் இப்பதான் முதல் விமான பயணம் போகிறான் என கண்டுபிடித்து விடலாம் .)முதலில் பதமான நீராவி செய்யப்பட்ட towel கொடுக்கப்படும் (ரெப்ரெஷ் பண்ண ),பின் சாக்லேட் (காது அடைத்து கொல்லாமல் தவிர்க்க),பின் விமானத்தில் தீ பிடித்தால் ,கடலில் விழுந்தால்,விபத்து நேர்ந்தால் எப்படி தப்பிக்கவேண்டும் என அழகாக அழகு பெண் பணிபெண்களால் கற்பிக்கப்படும் .
சந்தோசமான அந்த பயணம் துவங்கியது .அதற்குள்ளாக எங்கள் குழுவில் 5,6,பேர் கொண்ட செட் சேர்ந்து விட்டுஇருந்தது ,ஒரே கலகலப்புதான் .அடுத்த சில நிமிடங்களில் எல்லோர் முகத்திலும் திடீரென "1000 வாட்ஸ் " பல்ப் .என்னடா என பார்த்தேன் ..அங்கே ....ஒரு தேவதை உங்களுக்கு என்ன ட்ரிங்க்ஸ் வேண்டும் என கேட்டு அழகா கலக்கி கொடுத்துகிட்டே வந்துகொண்டிருந்தது . பீர்,ஸ்காட்ச் ,வோட்கா ,soft ட்ரிங்க்ஸ் எதுவேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம்.இரண்டு முறைக்கு மேல் என்றால் சிறித்து கொண்டே மறுக்கப்படும் .(நீங்க என்ன வாங்கினிங்க அப்டின்னு கேட்கிறிங்களா >>> அடுத்த பதிவில் ......!
No comments:
Post a Comment