Thursday, February 27, 2014

நான் ரசித்த தருணங்கள் ........5

                                          அங்கே  ஒரு பாம்பாட்டி பெரிய மலை பாம்புடன் உட்கார்ந்து இருந்தவன் மிக அருகில் வந்து மலை பாம்பை காட்டி  பரபரப்பாக்கி விட்டான் .பாம்புக்கு பசி, காசு கொடு என்று" ஹிந்தினான்" .அட போப்பா நாங்கல்லாம் தமிழ் நாட்டு காரெங்கே ......காசு வேணும்னா  என்  கழுத்துல போடுன்னேன்.(விளையாட்டுகுத்தான் ).பாவி பய நிஜமாவே கழுத்துல போட்டுட்டான் .
                         அப்புறம் என்ன பயமில்லாம (நாங்கல்லாம் யாரு?) கழுத்தில் போட்டு படம் எடுத்து விட்டு பாம்புக்கு கோழி வாங்க 50 rs  கொடுத்து விட்டு நகர்ந்தோம் .
                              அங்கிருந்து டேலச்கொபில் பார்த்தால் கேத்ரிநாத் ,பத்ரிநாத்  தெரியும் .நேரில் போக வழியில்ல இதிலாவது பார்க்க முடிந்ததே என்ற திருப்தி கிடைத்தது . சற்று இடப்பக்கம் திரும்பி வெறும் கண்ணால்  பார்த்தாலே அடிவானம் பார்க்கும் தூரத்தில் சைனா சுவர் காட்சி அழகோ அழகு.சிகரத்திலிருந்து சில km  தூரத்தில் அன்றைய சீனா  போர் காலத்தில் ஆக்கிரமித்த  பகுதி காணக்கிடைத்தது .(பின்நாளிலில் அரசியல் சாசன ஒப்பந்தப்படி சீனா  அந்த இடத்தை விட்டு விலகி போனது .)அங்கே உள்ள நாகராஜா  கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்ப குதிரை ஏறினோம் .(நாம் வந்த குதிரையின் பேரை மறக்க கூடாது அந்தபேரை சொல்லித்தான் return குதிரைவாங்கவேண்டும். என் குதிரை name  குளு).மீண்டும் 1.00 மணி நேர குதிரை சவாரி முடிந்து (இறங்கும்போதுதான் சீக்கிரம் யெரங்கிடலம்ல )சிகரம் விட்டு இறங்கினோம் .முதல் இரண்டு நாள் சிம்லாவிலேயே கடந்து விட்டது .மதிய உணவுக்கு பின் 5.00 pm கால்கா  ரயில்  பிடித்து ஹரித்துவார் புறப்பட தயாரானோம்.போகும் வழியில் தான் கட்டு எருமை சவாரி செய்யும் வைப்பு கிடைத்தது .ரயில் கிடைத்து 4.30 மணி நேர பயணம் செய்து இரவு ஹரித்துவார் அடைந்தோம். மூன்றாவது நாள் programe   பற்றி யோசித்து அயர்ச்சியில் தூங்கி போனோம் .காலை  எங்கள் கனவு பயண ஊர் ஹரிதுவார் ......!







நான் ரசித்த தருணங்கள் .....4








சிம்லாவில் 6 டிக்ரீ குளிரில் ஒரு வழியாக இரவைகழித்தபின்பு ,காலை  7 மணிக்கு  சிகரம் நோக்கி புறப்பட்டோம் .ரூமில் இருந்து காருக்கு செல்ல ஒரு 200 மீட்டர் தூரம் நடக்க ஆரம்பித்தோம்.ரூம் டெம்ப் கும் வெளி டெம்ப் கும் ,உள்ள வித்தியசத்தால் உடல் உதறல் எடுக்க கை கால் ,பல் எல்லாம் டைப் அடிக்க......செம அவஸ்தை போ.அப்போது பார்த்துதானா  என் அப்பா போன் செய்யவேண்டும் .நாக்கு சுளுக்கி பேச்சே வரவில்லை.(ஹதோ தப்பா  இந்த தொம்ப துதிரா இதுத்து  தப்பரம் பெதுறேன் ...என்றுதான் வார்த்தை வந்தது .வீட்டில் பயந்தே போனார்கள் )காரில் போய் டெம்ப் செட் ஆனவுடன் தான்  5 நிமிடத்தில் சரியானது .ஒருவழியாக 9.மணிக்கு சிகரம் போகும் பாதை அடைந்தோம் .அனால் அங்கிருந்து காரில் செல்லமுடியாது ஆளுக்கு ஒரு குதிரையில் தான் 1.30 மணி நேரம் மலை ஏறி செல்லவேண்டும் என்று தெரிந்தது . குதிரை ரெண்ட்  rs  200 கொடுத்து வாங்கியாச்சு ,கரடுமுரடான அந்தபாதையில ஒட்ட தெரியாதே ? குதிரைகர்ரன்  20 km கூட ஓடி வர முடியாது என்றான் .பின் எப்படி குதிரை ஓட்டுவது ? சொல்லிகொடுத்து (வாய்  வார்த்தை தான் )அனுப்பிவிட்டான்.குருட்டு தைரியம் வர கிளம்பினோம் ...அந்த experiance சூப்பர் .
குதிரையில் அமர்ந்து லகான்  பிடித்து இடுப்பில் கால் வைத்து தட்டி சுண்டினால் குதிரை ஓட ஆரம்பிகிறது .சுண்ட  சுண்ட வேகம் கூடுகிறது .இடது பக்கம் லகான்  இழுத்தால்  லெப்ட் ,வலது பக்கம் இழுத்தால் வலது ,தூக்கி இழுத்தால்  ஸ்டாப் .(அப்படா  ஒருவழியாய் கற்றுகொண்டோம் ).இதில் முக்கியம் கரடு பாதையில்  மேடு வந்தால் குதிரையின் கழு த்து பக்கம் குனிந்தும் ,இறக்கம் வந்தால் பின் பக்கம் சாய்ந்தும்  BALANCE  பண்ணவேண்டும் . இல்ல  கீழே விழ வேன்டியது தான் .(இரண்டு தடவை குதிரையே ஸ்லிப் ஆகி பாதையில் தடுமாறி வயிற்றில் புளி  கரைத்தது .1.15 மணி நேர சவாரிக்கு பின் சிம்லா சிகரத்தை வந்து அடைந்தோம் .அங்கே ......!

Wednesday, February 19, 2014

நான் ரசித்த தருணங்கள் ......3

நான் ரசித்த தருணங்கள் ...3
                                                         ஒரு வழியாக 5.00 மணி அளவில் சிம்லா வந்து சேர்ந்தோம் .நேரம் கடந்துவிட்டதால் குளுமணாலி செல்லமுடியாமல் போயிற்று .ரூம் பிடிதானது .நேரம் போக அருகில் உள்ள இடங்களை சுற்றிபார்த்துவிட்டு ரூம் வந்தோம் .குளிர் கொஞ்சம் கொஞ்சமாக கூடுவதை உணரமுடிந்தது .பயண அலுப்பால் 7.30 pm  தூங்க தொடங்கினோம் .வெளிப்புற ரூம் என்பதால் குளிர் அதிகம் உள்ளே நுழைந்தது .ரூம் temp மேலும் மேலும் குறைய........எங்களை அறியாமல் தூக்கத்தில் அழ்ந்தோம் .அனால் வொரு லெவெலுக்கு மேல் விழிக்க முடியவில்லை.(அதிக குளிரின் ஆபத்து அதுதான் என்று அன்று தான்  உணர்ந்தேன் ).எனது முளை குளிர் உறக்கத்தில் மூழ்க  ஆரம்பித்தது .கண்விழித்தவுடன்  எழுந்திரிக்க முடியவில்லை .கால் விரல்கள்  இரண்டும் முறிக்கிகொள்ள சரியான வலி .என்  நண்பன் அசோக் , முடியலைடா  முதல்ல ரூமா மாத்து என்றான் .ரூம் உள்ளே அமைந்த மாதிரி ரூமில் செட்டிலாணோம் .கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது.இரவு 10.30 மணி .....temp  6 டிகிரி தொட்டது .ஜெர்க்கின்,கம்பளி எல்லாம் இருந்தும் குளிரின் கொடுமை அதிகமானது .( தண்ணி அடிச்சா சரியாகும் ,சமாளிக்கலாம் என்றனர் ஹோட்டல் ஊழியர் .ரிஷிகேஷ் புனிதயாத்திரை போற போது கூடவே கூடாது யென்றொம் நாம் .)நிலைமை மோசமாகிக்கொண்டே போனது .பின் 11.30 க்கு ரூம் பாய் மூலமாக 300 ரூ வாடகைக்கு எங்கிருந்தோ ரூம்ஹீட்டர் எடுத்துவந்து (அவனுக்கு கோடி புன்னியாமடா  சாமி )போட்டு அருகில் உக்காந்து குளிர் காய  ஆரம்பித்து  இரவை களித்தோம்.எங்கே தூங்கிய படியே எழுந்திரிக்க முடியாமல் போய் சேந்துடுவோமோ என்ற பயம் தான் .இங்கே இந்தநிலைமை ,காலை சிம்லா சிகரம் போய்  என்ன படணுமோ என்று யோசித்தபடியே தூங்கிப்போனோம்.காலை சிகரம் நோக்கி கிளம்ப  தயாரானோம்  மீதி .........அடுத்த இடுகை 8 ல்  தருகிறேன்.பகிர்ந்தமைக்கு நன்றி
..

Saturday, February 15, 2014

நான் ரசித்த தருணங்கள் ....2

சில வருடங்களுக்கு முன் நானும் என்  நண்பன் அசோக்கும் ஹரிதுவார்  மற்றும் ரிஷிகேஷ் செல்ல முடிவெடுத்தோம் .பல பிளான்களுக்கு பின் 10 நாள்  டூர் என செட் ஆனது.மதுரை -டெல்லி  air சாகரா ,டெல்லி -மதுரை air decon விமானமும் புக் செய்தோம் அதிகாலை  விமானம் 25000 feet  உயரத்தில் சந்தோசமாக டெல்லி க்கு பறந்து கொண்டிருந்தது..டெல்லியிலிருந்து




காலை  11.am  கால்கா  செல்லும் ரயில் பிடித்து சிம்லா செல்ல பிளான் .maximum 9.30 லேன்டிங் .ஹைதராபாத் வழியாக டெல்லி .மொத்தம் 2.30 மணி நேரம் பயணம் .
முதல் சருக்கல் ஹைதராபாத்தில் .........கடும் பனிபொழிவு காரணமாக விமானம் இறங்க முடியவில்லை !!!!!!!!.சுமார் 1.15 மணிநேரம்வானத்தில் வட்டமிட்டுகொண்டே இருந்தது .விமானத்திலே காலை  உணவு முடித்து (சூப்பர் காலை  உணவு )ஒரு வழியாக லேன்டிங் .15 நிமிடம் கழித்து  டெல்லிக்கு டேக் ஆப் .லேட் ஆன  டென்சனுடன்  மீண்டும் ஒரு மணி நேர விமான பயணம் .டெல்லியிலும் இரண்டாவது சருக்கல் ..............அங்கும் மிக கடுமயான பனிபொழிவு .....!!!! விமானம் இறங்க முடிய வில்லை .சுமார் 1.30 மணி நேரம் வடமோ வட்டம்தான் .எப்போடா இறக்கி விடுவாங்க என்று ஆகிவிட்டது .(பஸ் ,ட்ரைன்னா வேடிக்க பார்க்க முடியும் .இங்க வெள்ளை மேகம் தவிர ஒன்னும் இல்ல .மதியம் லஞ்சும் (சூப்பர் nv போங்க )முடிஞ்சது .ஆக  2.30 மணி நேர பயணம் 5.30 மணிநேரம் ஆனது .மதியம் 1.00 மணிக்கு டெல்லி லேன்டிங் ஆனோம் .11 மணி கால்கா ட்ரைன்  போயி போச்சு.பிறகு என்ன 2.pm  ட்ரைன்  பிடித்து ஒருவழியாக சிம்லா நோக்கி பயணமானோம் .5.30 மணி நேர த்ரில்லான பயணம் ஒரு மறக்கமுடியாத (எனக்கு மட்டும் ஏன் இப்படி?) அனுபவம் .பகிர்ந்ததில் மகிழ்ச்சி .சிம்லா  சேர்ந்து பின் அங்கே நாங்கள் பட்ட பாடு ............அடுத்த இடுகையில் பகிர்கிறேன் .

Friday, February 14, 2014

என் முதல் விமான பயணம்

என்  முதல் விமான பயணம் பல வருடங்கள் முன் ( 9 -ம்  வகுப்பு படித்த போது ) விளையாட்டாய் அமைந்தது .அறிவியல் டீச்சர் டூர் பற்றி கேட்டபோது பசங்கள் சொன்ன முதல்சாய்ஸ் கேரளா (வயசு அப்படி).அப்போது நன் கேட்ட சாதாரண கேள்வி எதுல சார் போலாம் ?(பஸ் /ட்ரைன் ) .கூட்டத்திலிருந்து ஏண்டா ஒன்ன பிளைட்லையா கூடிபோவாங்க  என்றனர் .உடனே டீச்சர் ....ஏன் ப்ளைட்ல அவன் போகமுடியாதா ? இருடா கல்யாண்  நான்  கேட்டு சொல்றேன் என்றவர்  மிக குறைந்த கட்டணத்தில் அந்த மாதமே அதை நனவாக்கினார்  .35 பேர் கொண்ட குழு 3 நாள் கேரளா பயணம் போய்  வந்தோம்.இதில் பெரிய காமெடி என்னன்னா ,எங்கள் தெருவே கூடி தெரு கோவிலில் சாமி கும்பிட்டு விபுதி பூசி (30 பேருக்கு மேல்) வழியனுப்பி வைத்தனர் .அதை இப்போது நினைத்தாலும் சிரி
ப்பு தான்  வரும் .(அப்போது மதுரைக்கு வாரம் 2 முறை மட்டும் விமானம் வரும். ).இப்போதும் என்  பள்ளி h m  ரூமில் நங்கள் விமானம் முன் அமர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ பார்த்தால்  பெருமையாக தெரியும் .முதல் விமான பயண அனுபவம் பயந்தபடியும் சந்தோசமாகவும் அனுபவித்தோம்.பகிர்ந்ததில் மகிழ்ச்சி !!