Thursday, February 27, 2014

நான் ரசித்த தருணங்கள் .....4








சிம்லாவில் 6 டிக்ரீ குளிரில் ஒரு வழியாக இரவைகழித்தபின்பு ,காலை  7 மணிக்கு  சிகரம் நோக்கி புறப்பட்டோம் .ரூமில் இருந்து காருக்கு செல்ல ஒரு 200 மீட்டர் தூரம் நடக்க ஆரம்பித்தோம்.ரூம் டெம்ப் கும் வெளி டெம்ப் கும் ,உள்ள வித்தியசத்தால் உடல் உதறல் எடுக்க கை கால் ,பல் எல்லாம் டைப் அடிக்க......செம அவஸ்தை போ.அப்போது பார்த்துதானா  என் அப்பா போன் செய்யவேண்டும் .நாக்கு சுளுக்கி பேச்சே வரவில்லை.(ஹதோ தப்பா  இந்த தொம்ப துதிரா இதுத்து  தப்பரம் பெதுறேன் ...என்றுதான் வார்த்தை வந்தது .வீட்டில் பயந்தே போனார்கள் )காரில் போய் டெம்ப் செட் ஆனவுடன் தான்  5 நிமிடத்தில் சரியானது .ஒருவழியாக 9.மணிக்கு சிகரம் போகும் பாதை அடைந்தோம் .அனால் அங்கிருந்து காரில் செல்லமுடியாது ஆளுக்கு ஒரு குதிரையில் தான் 1.30 மணி நேரம் மலை ஏறி செல்லவேண்டும் என்று தெரிந்தது . குதிரை ரெண்ட்  rs  200 கொடுத்து வாங்கியாச்சு ,கரடுமுரடான அந்தபாதையில ஒட்ட தெரியாதே ? குதிரைகர்ரன்  20 km கூட ஓடி வர முடியாது என்றான் .பின் எப்படி குதிரை ஓட்டுவது ? சொல்லிகொடுத்து (வாய்  வார்த்தை தான் )அனுப்பிவிட்டான்.குருட்டு தைரியம் வர கிளம்பினோம் ...அந்த experiance சூப்பர் .
குதிரையில் அமர்ந்து லகான்  பிடித்து இடுப்பில் கால் வைத்து தட்டி சுண்டினால் குதிரை ஓட ஆரம்பிகிறது .சுண்ட  சுண்ட வேகம் கூடுகிறது .இடது பக்கம் லகான்  இழுத்தால்  லெப்ட் ,வலது பக்கம் இழுத்தால் வலது ,தூக்கி இழுத்தால்  ஸ்டாப் .(அப்படா  ஒருவழியாய் கற்றுகொண்டோம் ).இதில் முக்கியம் கரடு பாதையில்  மேடு வந்தால் குதிரையின் கழு த்து பக்கம் குனிந்தும் ,இறக்கம் வந்தால் பின் பக்கம் சாய்ந்தும்  BALANCE  பண்ணவேண்டும் . இல்ல  கீழே விழ வேன்டியது தான் .(இரண்டு தடவை குதிரையே ஸ்லிப் ஆகி பாதையில் தடுமாறி வயிற்றில் புளி  கரைத்தது .1.15 மணி நேர சவாரிக்கு பின் சிம்லா சிகரத்தை வந்து அடைந்தோம் .அங்கே ......!

No comments:

Post a Comment