Sunday, March 30, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் (2)

                    

                                              இம்மிகிரேசன் வரிசை சுமார் 30 நிமிடம் நகர்ந்தது .அதிகாரி பாஸ்போர்ட் எல்லாம் சரிபார்த்து ஓகே ஆன பின் சிரித்து கொண்டே ,நல்லா வொர்க் பண்ணி டார்கெட் முடிக்க வேண்டியது கம்பெனி  செலவுல வெளிநாடு கிளம்பவேண்டியது அப்படிதான? என்றார்.நானும் சிரித்துகொண்டே அமாம்  என்றேன் .ஓகே போய்ட்டு  வாங்க என்று அனுமதி கொடுத்தார் .(தாய்லாந்தில்  மட்டும் ஸ்பாட்  விசா கிடைக்கும் .அங்கேபோய்  சேர்ந்த பின் விசா வாங்கிகொள்ளலாம் .ஒரே ஒரு கேள்வி மட்டும் முக்கியமாக  அங்கே  கேட்கப்படும் ."எங்க நாட்டில் எவ்வளவு செலவு செய்வீர்கள் ".குறைந்த பட்சம் 50000/- rs  என்று புளுகி வையுங்கள் .)







                                                             விமானம் புறப்பட அயத்தமனதும் அறிவுப்பு வரும் ,எந்த பிளாக் ,எந்த நம்பர் எல்லாம் சரிபார்த்து நம் கை பை சோதனைக்கு பின் உள்ளேபோய்  அமர வேண்டியது தான் .(முகத்தையும் ,பரபரப்பையும் வைத்தே இவன் இப்பதான் முதல் விமான பயணம் போகிறான் என கண்டுபிடித்து விடலாம் .)முதலில் பதமான நீராவி செய்யப்பட்ட towel  கொடுக்கப்படும் (ரெப்ரெஷ் பண்ண ),பின் சாக்லேட் (காது அடைத்து கொல்லாமல் தவிர்க்க),பின் விமானத்தில் தீ பிடித்தால் ,கடலில் விழுந்தால்,விபத்து நேர்ந்தால் எப்படி தப்பிக்கவேண்டும் என அழகாக அழகு பெண் பணிபெண்களால் கற்பிக்கப்படும் .
                                                               சந்தோசமான அந்த பயணம் துவங்கியது .அதற்குள்ளாக எங்கள் குழுவில் 5,6,பேர் கொண்ட செட் சேர்ந்து விட்டுஇருந்தது ,ஒரே கலகலப்புதான் .அடுத்த சில நிமிடங்களில் எல்லோர் முகத்திலும் திடீரென "1000 வாட்ஸ் " பல்ப் .என்னடா என பார்த்தேன் ..அங்கே ....ஒரு தேவதை உங்களுக்கு என்ன ட்ரிங்க்ஸ் வேண்டும்  என கேட்டு அழகா கலக்கி கொடுத்துகிட்டே  வந்துகொண்டிருந்தது . பீர்,ஸ்காட்ச் ,வோட்கா ,soft  ட்ரிங்க்ஸ் எதுவேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம்.இரண்டு முறைக்கு மேல் என்றால் சிறித்து கொண்டே மறுக்கப்படும் .(நீங்க என்ன வாங்கினிங்க அப்டின்னு கேட்கிறிங்களா >>> அடுத்த பதிவில் ......!

Thursday, March 27, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் (1)
















          நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் .(1)

                                                  வணக்கம் நண்பர்களே !வலைதளங்களில் (facebook & பிளாக்கர் )டெல்லி ,ஹரித்துவார் ,ரிஷிகேஷ் சிம்லா  போன்ற உள்நாட்டு அனுபவங்களை பகிர்ந்து இருந்தேன் .இனி 2008 ம் ஆண்டும் ,2011 ம் ஆண்டும் இரண்டு முறை தாய்லாந்து  செல்ல  வாய்ப்பு கிட்டியது .அதன் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .என்  அனுபவங்கள் இனிமேல் தாய்லாந்து,மற்றும் வெளி நாடு செல்லப்போகும் இனியவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்பதால் தான் . கமெண்ட்ஸ்,லைக் ,ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
                                              முதல் முறை வெளிநாட்டு பயணம் என்றதும் எல்லோரையும் போல் மிக பதட்டத்துடன் தான் உணர்ந்தேன் .அதுவும் டார்கெட் அச்சிவ்மென்ட்டுக்காக  கிடைத்த பரிசு அது ( 2008 ஸ்பான்சர் :supreme industries  ltd@indo -supreme(p ) ltd.  2011 ஸ்பான்சர் khaithan fan @smfh (p )ltd .) ஆனாலும் ஒவ்வொரு முறை சென்றபோதும் குறைந்தது இந்திய மதிப்பில்  rs 20000/- தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும் .அப்போதுதான் தன்னம்பிக்கையுடன் பயணத்தை எதிர்கொள்ள முடியும் .அந்த பணத்தை அமெரிக்க டாலராக முடிந்தால் நீங்களே மாற்றிகொள்வதுநலம். முடிந்தவரை  எடை  குறைவான luggege போதுமானது .எப்போதும் நம்முடன் இருக்கும்படியான சிறிய பாதுகாப்பான பை ஒன்று அவசியம்.(பாஸ்போர்ட் ,டிக்கெட்,மொபைல்,camara ,ப்ரோக்ராம் லிஸ்ட் ,emergency  காண்டக்ட் no ,போன்ற அத்தியாவசிய பொருள்கள் அதில் இருப்பது முக்கியம் ).
                                                                       விமானம் புறப்படுவதற்கு குறைந்தது  மூன்று மணிநேரம் முன்னதாக விமான நிலையத்தில் உள்ள நாம் செல்லவேண்டிய விமான நிறுவனத்தின் கவுன்டரில் என்ட்ரி போடுவது மிக முக்கிய முதல் வேலை .அப்போதுதான் எடை போட்டு பெட்டிகளை அனுப்பி விட்டு (முக்கிய அத்தியாவசிய thasthavege மட்டும் எப்போதும் நம் கையில் ) ரிலாக்ஸ் அக முடியும் .இனி விமான புறப்பாடு அறிவிப்பு வரை அங்கேயே வெய்ட் செய்து பின் immigration  attain  பண்ண முடியும் .எல்லாம் முடிந்து immigration வருமாறு அறிவிப்பு வந்தது .தொடருவோம் .......!

                                                       

Monday, March 24, 2014

நான் ரசித்த தருணங்கள் ....11

                                 இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல் கண்காட்சி நியூ நொய்டா என்ற இடத்தில்  நடைபெற்றது .டெல்லி டு நொய்டா பஸ் பிடித்து நியூ நொய்டா டிக்கெட் எடுத்து கிளம்பினோம் .2 மணி நேர பயணத்திற்கு பின் நொய்டா இறங்கு என தெரிவித்ததும் இறங்கினோம் .பின் தான் தெரிந்தது இறங்கியது நொய்டா ....... நியூ நொய்டா போக இன்னும் 1.00 மணிநேரம் பயணம் பாக்கி உள்ளதென்று .....பின் மறுபடி ஒரு பஸ் பிடித்து போய்  சேர்ந்தோம் .கலக்கலான fare  ...டெக்ஸ்டைல்  பற்றி பல தகவல்கள் தெரிந்துகொண்டோம் .பின் காந்தி சமாதி ,,இந்திரா காந்தி சுடப்பட்ட இடம்  பார்த்து ஏர்போர்ட் கிளம்பினோம் .நடு  இரவு கிளம்பி காலை 6.30 மணிக்கு சென்னை சேரும் விமானம் அது.காலை விமானம் வந்து சேர்ந்தவுடன் வீட்டுக்கு போன் செய்து சென்னை வந்து சேர்ந்தோம் என தகவல் சொன்னால் .....எல்லோரும்  ஒரே அழுகை (3 நாளாக எங்களின்  எந்த ஒரு  தகவலும் இல்லை என்றால் கொஞ்சவா செய்வார்கள் ) ஒரு வழியாக சமாதனபடுத்தி விட்டு  மதுரை வந்து சேர்ந்தோம் .வந்து சேர்ந்ததே போதும் என எங்களை திட்டாமல் விட்டார்கள் .பரவா இல்ல ரெண்டு பசங்க மட்டும் தனியாளா போய்  நல்லபடியா திரும்பிடான்களே  என்ற பாராட்டு வேறு கிடைத்தது .போய்  வந்த அனுபவங்களை இப்போது உங்களிடம் பகிர்ந்ததை போல அனைவருடனும் மகிழ்வுடன் பரிமாறிக்கொண்டோம் .10 நாள் பயணம் வாழ்வின் பல சிறந்த அனுபவங்களை எங்களுக்கு கற்று கொடுத்தது .  fb  இல்   என்னுடன் 11 பக்கங்களுடனும் பயணித்தமைக்கு  நன்றிகள் பல.இனி என் முதல் வெளி நாட்டு பயணமான "தாய்லாந்து"  அனுபவங்களை வரும் நாட்களில் உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன் .                      (முற்றும் )  .                                 






                                நன்றியுடன் ....L .கல்யாண ராஜன் .M A .(9942264426).
                                                 

Monday, March 17, 2014

நான் ரசித்த தருணங்கள் .....10.




           மதுரா நோக்கி பயணமானோம் .கிருஷ்ணன் பிறந்ததாக கூறப்படும் இடம் .எளிமையாக அமைதி தவளும்படி இருந்தது .ஒவ்வொரு திருகோவிலாக கூட்டிபோனர்கள் .இந்த இரண்டு நாலும் குறைந்தது 15 முக்கிய கோவில்களுக்கு போய்  தரிசித்தோம் .அதனால் 2 நாலும் செல் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போனதால் எங்கள் வீடே சோகத்தில் தலை கீழாக மேரி இருந்தது எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .நாங்களும் வீட்டை மறந்தே போனோம் .கோவில் தரிசனம் மட்டுமே மனதில் நிரம்பி இருந்தது .
அங்கே  கிருஷ்ணன் கோவில் அருகிலே ,உள்ளே ஒரு பெரிய மசூதியும் அமைந்து இருந்தது  பலத்த போலிஸ்  காவலுடன். (பாபர் மசூதி பிரச்சனை அப்போது தான் மறந்து  ஓய்ந்து இருந்த சமையம் .).மூன்று கட்ட பரிசோதனைக்கு பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப்பட்டோம் .
                                                                              
                                                     அந்த கண்ணனின் ஆலயத்தில்  எல்லோரும் அவரவர் எண்ணப்படி பிரார்தனை செய்யும்போது  ஒரு இளம் பெண் வந்து கிருஷ்ண  கானம் ஒன்றை ஒலிக்கசெய்து கிருஷ்ணன் முன்னே 15 நிமிடம் நடனம் ஆடினாள் .தனது ஆட்டத்தின் மூலம் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்தார் .கண்கொள்ளா  காட்சி அது .மனம் உருகி , அபிணைத்து ,பிரார்த்தனையை நிறைவு செய்தார் .ஆடியும்  இறைவனிடம் சரநாகதி  அடைய வழி  இருக்கிறது என அன்று தான்  புரிந்தது .இரவு டெல்லி வந்து ஓய்வு எடுத்தோம் .நாளை இன்டர்நேஷனல் textile fare போய் வரவேண்டும் என்பது தான் பயணத்தின் கடைசி ப்ரோக்ராம் .அதற்க்கு ஆயத்தமாணோம் . தாஜ்மஹால் படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு ......!

Wednesday, March 12, 2014

நான் ரசித்த தருணங்கள் ..........9.

நான் ரசித்த தருணங்கள் ..........9.

கங்கா ஆரத்தி முடித்து டெல்லி வந்து சேர்ந்தோம் .காலை 4.30 மணிக்கு செங்கோட்டை பார்த்து ,பின் தாஜ்மஹால் .செங்கோட்டை பிரமிப்பான தோற்றம் .எதை சினிமாவில் பார்த்திருப்போம் ...அதை எல்லாம் நேரில் பார்த்து ரசிக்கும் தருணம் .....பிரமிப்பின் எல்லை .எத்தனை ,அரசியல் ,ராஜ்ய சட்ட,திட்ட,நிகழ்வுகளை பார்த்திருக்கும் இந்த கோட்டை.!! பின் இன்றும் துருபிடிக்காத குதுபினார் இரும்பு தூணை தொட்டு உணர்ந்தோம்.அதிசயித்தோம் .மதியம் 3.00 மணி அளவில் தாஜ்மஹால் வாசல் அடைந்தோம் .             **************வாழ்வில் அனைவரும் ஒருமுறை பார்க்கவேண்டிய காதல் சின்னம் .முதன் முதலாக  நேரில் கண்களால் பார்த்த உடன் கண்ணில் நீர் பூத்தது .என்ன ஒரு பிரமாண்ட காதல் இருந்தால் இப்படி ஒரு காதல் ஆலயம் கட்ட முடியும் .பிரமாண்டம் மற்றும் பிரமிப்பின் உச்சத்திற்கே போனேன் .நார்மலான மூச்சு விடவே சற்று நேரம் பிடித்தது .அதிக நேரம் அங்கே இருக்க மனம் நினைத்தது .வாழ்க்கையின் ஒரு சிறந்த இடத்தை பார்த்தோம் என்ற திருப்தி நிரம்பி வழிந்தது .உள்ளே ஷாஜஹான் -மும்தாஜ் சமாதி களை தரிசித்து திரும்ப மனம் இன்றி திரும்பினோம் .புகை படமும் எடுத்தோம்.(பட மெடுக்க அனுமதி இல்லை ).இன்றுடன் மனநிறைவான 7 நாட்கள் கழிந்தது .டெல்லி திரும்ப தயாரானோம் .மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பாரத்தோடு ............!கண்கள்மூடி  கனவுகளோடு பயணமானோம் .நாளை கிருஷ்ண  பகவன் பிறந்த மதுராவை தரிசிக்க வேண்டுமே .அயோத்தி ,பாபர் மசூதி .....சர்ச்சைக்குரிய இடங்களும் பாக்கி உள்ளதே .!!!!!!.இந்த நிலையில் ஒரு தவறை நானும் ,என்  நண்பனும் செய்தோம் எங்களை மறந்து.அது கிருஷ்ணன் பிறந்த புண்ணிய பூமியான மதுராவிலிருந்து தொடங்கியது .கிருஷ்ண பகவானின் மேல் கொண்ட பக்தியால் ,மயக்கத்தால்  வீட்டுக்கு தொடர்பு கொள்வதையே மறந்துபோனோம். எங்கள் வீட்டில் கடைசி இரண்டுநாளும் துக்க  வீடு போல் ஆனது .ஏதோ நேரகூடாதது  நேர்ந்துவிட்டதாக பயந்து போனார்கள்.(14 NOS SENKOTTAI PICS FOR UR EYES).தாஜ்மஹால் படம்  அடுத்த இடுகையில் ..........!.













ஒரு தவறை நானும் ,என்  நண்பனும் செய்தோம் எங்களை மறந்து ..

Thursday, March 6, 2014

நான் ரசித்த தருணங்கள் .........(8). கங்கா ஆரத்தி

நான் ரசித்த தருணங்கள் .........(8).

                                                               கங்கா ஆரத்தி முடிந்து 40 நிமிடம் கழித்து தான்
அங்கே போய்  சேரமுடிந்தது .சரி அடுத்த செயல் நடக்கவேண்டியது தான் .அந்த கூட்டத்தை விலக்கி ஆற்றின் கரை வழி  நடந்து வழிபாடு செய்யும் இடம் அடைந்தோம் .நூறு ரூபாய் கொடுத்தால் பூஜை செய்ய குருமார்கள் வழிகாட்டி செய்து கொடுப்பார்கள் .பூஜை பொருள்கள் வாங்கி  விளக்கு ஏற்றி கங்கையில் கால் வைத்து முன்னோர்களை மனதில் நினைத்து வணங்கினேன் .கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது.யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் .கடவுள் அருள் இருந்ததனால் தானே நான்  இப்போது இந்த இடத்தில்  நிற்கிறேன் .என்  குடும்பத்தில் இதுவரை நான்  மட்டுமே இந்த பாக்கியம் பெற்றேன் என நினைத்தால் மிக பெருமையாக இருக்கிறது .(உணர்வுபூர்வமான அந்த படங்கள் உங்கள் கண்களுக்காக இங்கே.) .இந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியங்களின் பலன் கிடைக்கபெற்றதாய் உணர்ந்தேன் .வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி !.மன நிறைவுடன் ரூமுக்கு திரும்பினோம் .


 இரவு நல்ல உறக்கம் ,காலை எழுந்து அங்குள்ள மற்ற கோவில்களுக்கு புறப்பட தயாரானோம் .எனது வீட்டிற்க்கு செல்லில் இரவில்அவ்வப்போது தகவல் கொடுத்தோம் .( கோவிலில் சுவிட்ச் ஆப் செய்தாகவேண்டும் ).எனவே இந்த ஆறு நாட்களும் எந்த பிரச்னையும் இல்லை .கோவில் கோவிலாக சந்நியாசியாக திரிந்து கொண்டிருந்தோம் .மறுநாள் டெல்லி கிளம்ப தயாரானோம் .இனி செங்கோட்டை ,மற்றும் அணைத்து ஆணும் பெண்ணும் காண துடிக்கும் ஒரு இடம்,ஒவ்வொரு காதலர்களின் கோவில் ,உலக அதிசயங்களில் ஒன்றான .............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!













Wednesday, March 5, 2014

நான் ரசித்த தருணங்கள் ........(7) ... .RISHIKESH...!!!




                           ரிஷிகேஷில் காலடி பட்டவுடனே மனதில் சந்தோஷ அலை ..இமயத்தின் அடிவாரமாவது தொட முடிந்ததே .புண்ணிய ஆத்மாக்கள் பாதம் பட்ட இடத்தில நான் இருக்கிறேன் என்பதே சந்தோசம் கொடுத்தது. இங்கே இருந்து சூடு பிடிக்க ஆரம்பித்தது யாத்திரை .போனோம் போனோம் கோவில்  கோவிலாக .மனம் ஒருமுகப்பட ஆரம்பித்தது .எந்த எண்ணமும் இல்லை ,     துக்கம் இல்லை ,நாளை என்ற எண்ணம் இல்லை .ஒவ்வொரு நிமிடத்தையும் மன நிறைவுடன் கடந்தோம் .
                                                       ராமருக்கு கோவில் உண்டு ...லக்ஷ்மணனுக்கு தனியான கோவில் .......?.. .இங்கே  ரிஷிகேஷில்  உண்டு .தரிசித்தோம் (என் தந்தை பெயர் லக்ஷ்மணன் த்ரிசிக்கவிட்டால் எப்படி ?).
                                                              பிரசித்தி பெற்ற தொங்கு பாலம் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டோம் .எல்ல கோவில்களிலும் DONATION  கேட்பார்கள் .முடிந்தால் கொடுக்கலாம் .இல்லை என்றால் பிரச்னை இல்லை .(ஆனால்  ஹரித்துவாரில் சில பிரச்சனைகள் உண்டு) மனநிறைவுடன் கங்கா ஆராத்தி க்கு புறப்பட்டோம் .அனால் நேரம் போய்கொண்டே இருந்தது .ஆரத்தி  நேரத்துக்குள்போய் விடுவோமா ? எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்தோம் .நாங்கள் ஹரித்துவார்  போய் சேர்ந்தபோது ..........கங்கா ஆரத்தி முடிந்து இருந்தது .
 


Sunday, March 2, 2014

நான் ரசித்த தருணங்கள் ...........6 (ஹரித்துவார்)

ஹரித்துவார்.....ஒரு புனித நகரம் .கோவில்கள் நிறைந்த இடம் .அங்கே நாம்  தங்கி இருக்கும் ஹோட்டல் வரவேற்பாளரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்தால் சைட் சீன் குரூப் booking  பண்ணி கொடுப்பார்கள் .20 நபர் கொண்ட குழுவாக  ஒரு பிடித்து தருவார்கள். அதற்க்கான தொகை செலுத்தினால் போதும் .அருகில் உள்ள முக்கிய இடங்களுக்கு கூட்டிபோய் விட்டு guide  உடன் காண்பிப்பார்கள் .(ஹிந்தி  எங்களுக்கு தெரியாததால் நங்கள் கேட்டுகொண்டதால் இங்கிலிஷில் தனியாக  விளக்கினர் அந்த நல்ல உள்ளம் கொண்ட guide .)கங்கை நதியின் அழகு கண்கொள்ள காட்சி .

 ஹரித்துவார் நங்கள் வந்ததற்கு மிக முக்கியம் கங்கா ஆரத்தி ,முன்னோர் ஆத்மா சாந்திக்கு இங்கே வணங்கி பிரார்த்தித்தால் புண்ணியம்.ஆத்மா சாந்தியும் கிடைக்கும் .முன்னோர் வாழ்த்தும் கிடைக்கபெருவோம் .அது கடவுள் அருளால் நிறைவேறியது நான் செய்த பெரும் பாக்கியம் .6.30 pm  ரிஷ்கேஷ் போய்  வந்து விட்டால் கங்கா ஆரத்தி பார்த்துவிடலாம்  என்று கிளம்பி போனோம் .(..ஆனால் ஆரத்தி நேரத்தில் வரமுடிய வில்லை). இங்கிருந்து 20 km  -இல் ரிஷிகேஷ் .........எல்லா ரிஷிகளும் ,மகான்களும் ,பெரியோர்களும் போய்  வர துடிக்கும் புனித ரிஷிகள் இன்றும் வாழும் இடம் .(ரஜினி அடிக்கடி  போராறே  ஞாபகம் வருதா ?)


வேனில் கிளம்ப  தயாரானோம் .மனதில் சந்தோசத்துடன்.     .......!ரிஷிகேஷ் !!!!!!!!!!