Thursday, March 6, 2014

நான் ரசித்த தருணங்கள் .........(8). கங்கா ஆரத்தி

நான் ரசித்த தருணங்கள் .........(8).

                                                               கங்கா ஆரத்தி முடிந்து 40 நிமிடம் கழித்து தான்
அங்கே போய்  சேரமுடிந்தது .சரி அடுத்த செயல் நடக்கவேண்டியது தான் .அந்த கூட்டத்தை விலக்கி ஆற்றின் கரை வழி  நடந்து வழிபாடு செய்யும் இடம் அடைந்தோம் .நூறு ரூபாய் கொடுத்தால் பூஜை செய்ய குருமார்கள் வழிகாட்டி செய்து கொடுப்பார்கள் .பூஜை பொருள்கள் வாங்கி  விளக்கு ஏற்றி கங்கையில் கால் வைத்து முன்னோர்களை மனதில் நினைத்து வணங்கினேன் .கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது.யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் .கடவுள் அருள் இருந்ததனால் தானே நான்  இப்போது இந்த இடத்தில்  நிற்கிறேன் .என்  குடும்பத்தில் இதுவரை நான்  மட்டுமே இந்த பாக்கியம் பெற்றேன் என நினைத்தால் மிக பெருமையாக இருக்கிறது .(உணர்வுபூர்வமான அந்த படங்கள் உங்கள் கண்களுக்காக இங்கே.) .இந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியங்களின் பலன் கிடைக்கபெற்றதாய் உணர்ந்தேன் .வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி !.மன நிறைவுடன் ரூமுக்கு திரும்பினோம் .


 இரவு நல்ல உறக்கம் ,காலை எழுந்து அங்குள்ள மற்ற கோவில்களுக்கு புறப்பட தயாரானோம் .எனது வீட்டிற்க்கு செல்லில் இரவில்அவ்வப்போது தகவல் கொடுத்தோம் .( கோவிலில் சுவிட்ச் ஆப் செய்தாகவேண்டும் ).எனவே இந்த ஆறு நாட்களும் எந்த பிரச்னையும் இல்லை .கோவில் கோவிலாக சந்நியாசியாக திரிந்து கொண்டிருந்தோம் .மறுநாள் டெல்லி கிளம்ப தயாரானோம் .இனி செங்கோட்டை ,மற்றும் அணைத்து ஆணும் பெண்ணும் காண துடிக்கும் ஒரு இடம்,ஒவ்வொரு காதலர்களின் கோவில் ,உலக அதிசயங்களில் ஒன்றான .............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!













No comments:

Post a Comment