இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல் கண்காட்சி நியூ நொய்டா என்ற இடத்தில் நடைபெற்றது .டெல்லி டு நொய்டா பஸ் பிடித்து நியூ நொய்டா டிக்கெட் எடுத்து கிளம்பினோம் .2 மணி நேர பயணத்திற்கு பின் நொய்டா இறங்கு என தெரிவித்ததும் இறங்கினோம் .பின் தான் தெரிந்தது இறங்கியது நொய்டா ....... நியூ நொய்டா போக இன்னும் 1.00 மணிநேரம் பயணம் பாக்கி உள்ளதென்று .....பின் மறுபடி ஒரு பஸ் பிடித்து போய் சேர்ந்தோம் .கலக்கலான fare ...டெக்ஸ்டைல் பற்றி பல தகவல்கள் தெரிந்துகொண்டோம் .பின் காந்தி சமாதி ,,இந்திரா காந்தி சுடப்பட்ட இடம் பார்த்து ஏர்போர்ட் கிளம்பினோம் .நடு இரவு கிளம்பி காலை 6.30 மணிக்கு சென்னை சேரும் விமானம் அது.காலை விமானம் வந்து சேர்ந்தவுடன் வீட்டுக்கு போன் செய்து சென்னை வந்து சேர்ந்தோம் என தகவல் சொன்னால் .....எல்லோரும் ஒரே அழுகை (3 நாளாக எங்களின் எந்த ஒரு தகவலும் இல்லை என்றால் கொஞ்சவா செய்வார்கள் ) ஒரு வழியாக சமாதனபடுத்தி விட்டு மதுரை வந்து சேர்ந்தோம் .வந்து சேர்ந்ததே போதும் என எங்களை திட்டாமல் விட்டார்கள் .பரவா இல்ல ரெண்டு பசங்க மட்டும் தனியாளா போய் நல்லபடியா திரும்பிடான்களே என்ற பாராட்டு வேறு கிடைத்தது .போய் வந்த அனுபவங்களை இப்போது உங்களிடம் பகிர்ந்ததை போல அனைவருடனும் மகிழ்வுடன் பரிமாறிக்கொண்டோம் .10 நாள் பயணம் வாழ்வின் பல சிறந்த அனுபவங்களை எங்களுக்கு கற்று கொடுத்தது . fb இல் என்னுடன் 11 பக்கங்களுடனும் பயணித்தமைக்கு நன்றிகள் பல.இனி என் முதல் வெளி நாட்டு பயணமான "தாய்லாந்து" அனுபவங்களை வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . (முற்றும் ) .
நன்றியுடன் ....L .கல்யாண ராஜன் .M A .(9942264426).
நன்றியுடன் ....L .கல்யாண ராஜன் .M A .(9942264426).
No comments:
Post a Comment