ரிஷிகேஷில் காலடி பட்டவுடனே மனதில் சந்தோஷ அலை ..இமயத்தின் அடிவாரமாவது தொட முடிந்ததே .புண்ணிய ஆத்மாக்கள் பாதம் பட்ட இடத்தில நான் இருக்கிறேன் என்பதே சந்தோசம் கொடுத்தது. இங்கே இருந்து சூடு பிடிக்க ஆரம்பித்தது யாத்திரை .போனோம் போனோம் கோவில் கோவிலாக .மனம் ஒருமுகப்பட ஆரம்பித்தது .எந்த எண்ணமும் இல்லை , துக்கம் இல்லை ,நாளை என்ற எண்ணம் இல்லை .ஒவ்வொரு நிமிடத்தையும் மன நிறைவுடன் கடந்தோம் .
ராமருக்கு கோவில் உண்டு ...லக்ஷ்மணனுக்கு தனியான கோவில் .......?.. .இங்கே ரிஷிகேஷில் உண்டு .தரிசித்தோம் (என் தந்தை பெயர் லக்ஷ்மணன் த்ரிசிக்கவிட்டால் எப்படி ?).
பிரசித்தி பெற்ற தொங்கு பாலம் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டோம் .எல்ல கோவில்களிலும் DONATION கேட்பார்கள் .முடிந்தால் கொடுக்கலாம் .இல்லை என்றால் பிரச்னை இல்லை .(ஆனால் ஹரித்துவாரில் சில பிரச்சனைகள் உண்டு) மனநிறைவுடன் கங்கா ஆராத்தி க்கு புறப்பட்டோம் .அனால் நேரம் போய்கொண்டே இருந்தது .ஆரத்தி நேரத்துக்குள்போய் விடுவோமா ? எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்தோம் .நாங்கள் ஹரித்துவார் போய் சேர்ந்தபோது ..........கங்கா ஆரத்தி முடிந்து இருந்தது .
No comments:
Post a Comment