Sunday, March 2, 2014

நான் ரசித்த தருணங்கள் ...........6 (ஹரித்துவார்)

ஹரித்துவார்.....ஒரு புனித நகரம் .கோவில்கள் நிறைந்த இடம் .அங்கே நாம்  தங்கி இருக்கும் ஹோட்டல் வரவேற்பாளரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்தால் சைட் சீன் குரூப் booking  பண்ணி கொடுப்பார்கள் .20 நபர் கொண்ட குழுவாக  ஒரு பிடித்து தருவார்கள். அதற்க்கான தொகை செலுத்தினால் போதும் .அருகில் உள்ள முக்கிய இடங்களுக்கு கூட்டிபோய் விட்டு guide  உடன் காண்பிப்பார்கள் .(ஹிந்தி  எங்களுக்கு தெரியாததால் நங்கள் கேட்டுகொண்டதால் இங்கிலிஷில் தனியாக  விளக்கினர் அந்த நல்ல உள்ளம் கொண்ட guide .)கங்கை நதியின் அழகு கண்கொள்ள காட்சி .

 ஹரித்துவார் நங்கள் வந்ததற்கு மிக முக்கியம் கங்கா ஆரத்தி ,முன்னோர் ஆத்மா சாந்திக்கு இங்கே வணங்கி பிரார்த்தித்தால் புண்ணியம்.ஆத்மா சாந்தியும் கிடைக்கும் .முன்னோர் வாழ்த்தும் கிடைக்கபெருவோம் .அது கடவுள் அருளால் நிறைவேறியது நான் செய்த பெரும் பாக்கியம் .6.30 pm  ரிஷ்கேஷ் போய்  வந்து விட்டால் கங்கா ஆரத்தி பார்த்துவிடலாம்  என்று கிளம்பி போனோம் .(..ஆனால் ஆரத்தி நேரத்தில் வரமுடிய வில்லை). இங்கிருந்து 20 km  -இல் ரிஷிகேஷ் .........எல்லா ரிஷிகளும் ,மகான்களும் ,பெரியோர்களும் போய்  வர துடிக்கும் புனித ரிஷிகள் இன்றும் வாழும் இடம் .(ரஜினி அடிக்கடி  போராறே  ஞாபகம் வருதா ?)


வேனில் கிளம்ப  தயாரானோம் .மனதில் சந்தோசத்துடன்.     .......!ரிஷிகேஷ் !!!!!!!!!!

No comments:

Post a Comment