நான் ரசித்த தருணங்கள் ..........9.
கங்கா ஆரத்தி முடித்து டெல்லி வந்து சேர்ந்தோம் .காலை 4.30 மணிக்கு செங்கோட்டை பார்த்து ,பின் தாஜ்மஹால் .செங்கோட்டை பிரமிப்பான தோற்றம் .எதை சினிமாவில் பார்த்திருப்போம் ...அதை எல்லாம் நேரில் பார்த்து ரசிக்கும் தருணம் .....பிரமிப்பின் எல்லை .எத்தனை ,அரசியல் ,ராஜ்ய சட்ட,திட்ட,நிகழ்வுகளை பார்த்திருக்கும் இந்த கோட்டை.!! பின் இன்றும் துருபிடிக்காத குதுபினார் இரும்பு தூணை தொட்டு உணர்ந்தோம்.அதிசயித்தோம் .மதியம் 3.00 மணி அளவில் தாஜ்மஹால் வாசல் அடைந்தோம் . **************வாழ்வில் அனைவரும் ஒருமுறை பார்க்கவேண்டிய காதல் சின்னம் .முதன் முதலாக நேரில் கண்களால் பார்த்த உடன் கண்ணில் நீர் பூத்தது .என்ன ஒரு பிரமாண்ட காதல் இருந்தால் இப்படி ஒரு காதல் ஆலயம் கட்ட முடியும் .பிரமாண்டம் மற்றும் பிரமிப்பின் உச்சத்திற்கே போனேன் .நார்மலான மூச்சு விடவே சற்று நேரம் பிடித்தது .அதிக நேரம் அங்கே இருக்க மனம் நினைத்தது .வாழ்க்கையின் ஒரு சிறந்த இடத்தை பார்த்தோம் என்ற திருப்தி நிரம்பி வழிந்தது .உள்ளே ஷாஜஹான் -மும்தாஜ் சமாதி களை தரிசித்து திரும்ப மனம் இன்றி திரும்பினோம் .புகை படமும் எடுத்தோம்.(பட மெடுக்க அனுமதி இல்லை ).இன்றுடன் மனநிறைவான 7 நாட்கள் கழிந்தது .டெல்லி திரும்ப தயாரானோம் .மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பாரத்தோடு ............!கண்கள்மூடி கனவுகளோடு பயணமானோம் .நாளை கிருஷ்ண பகவன் பிறந்த மதுராவை தரிசிக்க வேண்டுமே .அயோத்தி ,பாபர் மசூதி .....சர்ச்சைக்குரிய இடங்களும் பாக்கி உள்ளதே .!!!!!!.இந்த நிலையில் ஒரு தவறை நானும் ,என் நண்பனும் செய்தோம் எங்களை மறந்து.அது கிருஷ்ணன் பிறந்த புண்ணிய பூமியான மதுராவிலிருந்து தொடங்கியது .கிருஷ்ண பகவானின் மேல் கொண்ட பக்தியால் ,மயக்கத்தால் வீட்டுக்கு தொடர்பு கொள்வதையே மறந்துபோனோம். எங்கள் வீட்டில் கடைசி இரண்டுநாளும் துக்க வீடு போல் ஆனது .ஏதோ நேரகூடாதது நேர்ந்துவிட்டதாக பயந்து போனார்கள்.(14 NOS SENKOTTAI PICS FOR UR EYES).தாஜ்மஹால் படம் அடுத்த இடுகையில் ..........!.
ஒரு தவறை நானும் ,என் நண்பனும் செய்தோம் எங்களை மறந்து ..

No comments:
Post a Comment