மதுரா நோக்கி பயணமானோம் .கிருஷ்ணன் பிறந்ததாக கூறப்படும் இடம் .எளிமையாக அமைதி தவளும்படி இருந்தது .ஒவ்வொரு திருகோவிலாக கூட்டிபோனர்கள் .இந்த இரண்டு நாலும் குறைந்தது 15 முக்கிய கோவில்களுக்கு போய் தரிசித்தோம் .அதனால் 2 நாலும் செல் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போனதால் எங்கள் வீடே சோகத்தில் தலை கீழாக மேரி இருந்தது எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .நாங்களும் வீட்டை மறந்தே போனோம் .கோவில் தரிசனம் மட்டுமே மனதில் நிரம்பி இருந்தது .
அங்கே கிருஷ்ணன் கோவில் அருகிலே ,உள்ளே ஒரு பெரிய மசூதியும் அமைந்து இருந்தது பலத்த போலிஸ் காவலுடன். (பாபர் மசூதி பிரச்சனை அப்போது தான் மறந்து ஓய்ந்து இருந்த சமையம் .).மூன்று கட்ட பரிசோதனைக்கு பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப்பட்டோம் .
அந்த கண்ணனின் ஆலயத்தில் எல்லோரும் அவரவர் எண்ணப்படி பிரார்தனை செய்யும்போது ஒரு இளம் பெண் வந்து கிருஷ்ண கானம் ஒன்றை ஒலிக்கசெய்து கிருஷ்ணன் முன்னே 15 நிமிடம் நடனம் ஆடினாள் .தனது ஆட்டத்தின் மூலம் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்தார் .கண்கொள்ளா காட்சி அது .மனம் உருகி , அபிணைத்து ,பிரார்த்தனையை நிறைவு செய்தார் .ஆடியும் இறைவனிடம் சரநாகதி அடைய வழி இருக்கிறது என அன்று தான் புரிந்தது .இரவு டெல்லி வந்து ஓய்வு எடுத்தோம் .நாளை இன்டர்நேஷனல் textile fare போய் வரவேண்டும் என்பது தான் பயணத்தின் கடைசி ப்ரோக்ராம் .அதற்க்கு ஆயத்தமாணோம் . தாஜ்மஹால் படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு ......!
No comments:
Post a Comment