Sunday, April 27, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part..10




  பாண்டசி ஷோ  உள்ளே போட்டோ எடுக்க அனுமதி இல்லை .செல் போன் தடை .பார்வையாளராக மட்டுமே அனுமதி .அங்கே ஒரு மேடையில் டான்ஸ் மற்றும் கவர்ச்சியானபாலியல் விஷயங்கள் தான் .குடும்பஉறுப்பினர் ,மற்றும் குடும்ப நண்பர்களுடன் செல்வோர் தவிர்ப்பது நல்லது .தெரியாதனமா போய்  உக்காந்தால் சங்கடப்பட்டு தான்  வரவேண்டி இருக்கும் .அங்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு சிறப்பு வாய்ப்பு ஒன்று தரப்படும் .என்னுடன் வந்த நண்பருக்கு அந்த வாய்ப்பு  கிடைக்க ....எங்களுக்கு தங்கவே முடியாத சிரிப்பு .காரணம் அவரை வெறும் துண்டுடன் மேடையில் உக்கார வைத்து அவரை சுற்றி சுற்றி  நான்கு பெண்கள் காபரே ஆட .....செம கில்பான்சியா போச்சு .அதோடு விட்டார்களா அவரை பாத் டப்பில் படுக்க வைத்து நான்கு  பெண்களும் ஆயில் மசாஜ் செய்து  குளிப்பாட்டி தலை சீவி ,பவுடர்  அடித்து சென்ட் பூசி அனுப்பிவைத்தார்கள் (.ப்ரீ பா  ப்ரீ !!!!.) என்ன சார்  எப்படி பீல் பண்ணிங்க என்று அவரை கேட்டா .........ஐயோ  ஐயோ ...நான் எங்க இந்த உலகத்துல இருந்தேன் ,இந்திர லோகம் போய் அல்லவா வந்தேன் என்று குறும்புடன் சிரித்தார் . கடைசியாக  ஒரு ஆணும் பெண்ணும் ....லைவ் வாக @@ ## **வேண்டாம் போதும் இப்படியே  விட்டு விடுவோமே !(ஹவ்வ்வ்வ்வ்) .ஒரு வழியாக வெளியே வந்து இரவு உணவு முடித்து ரெஸ்ட் எடுத்து விட்டு 10 மணிக்கு மேல் மீண்டும் வாக் இன் ஸ்ட்ரீட் கிளம்பி ரவுண்டு அடித்தோம் .அடுத்து கொரேல் corel  island காலை  புறப்பட்டோம் .அங்கே எனக்கு (2008-ல் )ஒரு பெரிய ஆப்பு காத்துகொண்டு இருந்தது .அது பற்றி  அடுத்த இடுகை(11)யில்  தொடர்கிறேன் .

Saturday, April 26, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part..9

                                               நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் .  9                                                                                                            அல்கசர் ஷோ தாய்லாந்தின் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று .இதனை நடத்துபவர்கள் முழுக்க முழுக்க திருநங்கைகள்.பெரிய தியேட்டரில் இதற்காகவே  சவுண்ட் மற்றும் லைட் எப்பெக்ட் உடன் மியூசிக் ப்ரோக்ராம்  பிரமாண்ட செட்டிங்க்ஸ்ல் நடக்கும் ..(ஒரு ஹிந்தி பாடலும் உண்டு).காமெடி பாடல் ,மெலடி ,சோகம் ,கவர்ச்சி (ஒரே ஒரு பாடல் மட்டும்),என அசத்தி விட்டார்கள் .ஷோ முடிந்ததும் நடித்தவர்கள் வெளியே வருவார்கள் .அவர்களோடு போட்டோ எடுக்கலாம் .(டிப்ஸ் 30 or 40 பாத்  தர வேண்டும் ).டூரிஸ்ட்களால் அரங்கம் நிரம்பி வழிகிறது .!! (இந்தியாவில் இன்னும் திருநங்கைகள் கேவலமாகவும்,காசு வாங்கிக்கொண்டும் தான் இருக்கிறார்கள் .) ஒரே நபர் ஆணாகவும் அடுத்த நொடி பெண்ணாகவும் மாறி மாறி பாடும் பாடல் மேக் அப் டெக்னிக் செம ஜோர் .வெளியே வந்து இரண்டு போட்டோ எடுத்துக்கொண்டேன் .                                                                                                (உண்மையாக அவர்கள் மேல் மனதில்  நல்ல மதிப்பு வந்தது ).


ப்ரீ கூல்ட்ரிங்க்ஸ் உங்கள் இருக்கை தேடி வரும் .ருசிதுகொண்டே ரசிக்கலாம் .
 





அடுத்து உணவு முடித்து விட்டு பாண்டசி ஷோ புறப்பட்டோம் .எல்லோர்  முகத்திலும் ஒருவித வெட்கம் கலந்த சந்தோஷம்  பார்க்க முடிந்தது ,ஏன் என்றால் fantacy  ஷோ எனபது முழுக்க முழுக்க(A) பாலுறவு சம்பத்தப்பட்ட ஷோ (அடல்ட் ஒன்லி). இதுபற்றி அடுத்த இடுகை 10-ல் மேலோட்டமாக காணலாம் .

Tuesday, April 8, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்.(part -6).......

                    
                                                       இரண்டு உறங்குட்டான் குரங்கு விதை காட்டியதை வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்தேன் . என்  நண்பர் என் கையை பற்றிக்கொண்டேதான் வருவார் (அவருக்கு எங்கே  தான்  தொலைந்து விடுவோமோ என்ற பயம் ).அந்த பழக்கத்தில் நானும் கையை நீட்ட பற்றி கொண்டு புறப்பட்டேன் .ஒரு பத்து அடி நடந்திருப்பேன் .......என்ன இவர் கை இப்படி கரடு முரடா இருக்குன்னு திரும்பி பார்த்து அதிர்ந்தே போனேன் ..............!
அது வரை பத்தடி கை பிடித்து நடந்து வந்தது....... கொய்யால ### அந்த உறங்குட்டன் குரங்கு தான் .



பின்னாடியே குரங்குகாரன் ஓடிவந்து சிரித்துகொண்டே பிடித்து கூட்டிபோனான் .(கைய பிடிச்ச குரங்க இந்தியா  கூட்டி வந்திருக்கலாமோ..?).அப்படா  என நடுக்கத்துடன் நகர்ந்தேன் .
                                அடுத்து ஜேம்ஸ் பாண்ட் ஷோ .......படத்தில் வருவதை நிஜ செட்டிங்கில் வைத்து நடத்தி காட்டினர் .செம த்ரில் ஷோ .என்ஜாய் பண்ணி பார்த்து ரசித்தேன் .
                                       விலங்குகள் இருக்கும் இடத்தை காரில் இருந்தபடியே சுற்றி காண்பித்தார்கள் .முடித்ததும் ரூம் ரெஸ்ட் .இரவு 8 மணிக்கு WALK  இன் ஸ்ட்ரீட் செல்வதாக ஏற்பாடு .எங்கள் செட் 9 பேர் செம கூலாக கிளம்பினோம் .
முதல் முறை (2008)சற்று பயந்தபடி தான் போய்  வந்தோம் .2011 இல் இரண்டாம் முறை பயமின்றி ஜாலி ரைடு தான் .அது பற்றி அடுத்த பதிவில்         " ஜொள்" கிறே(A )ன் .

Monday, April 7, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்.(part -5).......

 நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்.(part -5)டால்பின் ஷோ ,சீகல்  ஷோ  சூப்பர் என்டேடைன்மென்ட்









.டால்பினும் ,சீகலும் நாய் குட்டி போல அழகாக பழக்க படுத்த பட்டு வித்தை காட்டின .45 நிமிட ஷோ .சரியான நேரத்தில் நுழைய வில்லை என்றால்  அடுத்த ஷோ வரை வெய்ட் பண்ணவேண்டி வரும் ....நேரம் விரையமாகும் .எனவே டைம் management  ரொம்ப முக்கியம் .முடித்து விட்டு வரும் வழியில் தான் அந்த காமெடி நடந்தது .நான் பாட்டுக்கு சிவேனேன்னு நடந்து வரும்போது திடீரென்று என்மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தது .திடுக்கிட்டு திரும்பி பார்த்தால் ,அருகில் இருந்த தாய்லாந்து  நாட்டினர் லக்கி பாய் ,லக்கி மேன் ..என கை குலுக்கி போனார்கள் .ஒன்றும் புரியாமல் விழித்து  திரும்பி பார்த்தேன் .ஒரு அழகான பெண் சிலையின் மார்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது தெரிந்தது .அந்த அதிர்ஷ்ட சிலை இதுதான் .எப்போதாவது குறிப்பிட்டஒரு  கால இடைவெளியில் அது நடைபெறுமாறு "செட் "செய்யப்பட்டு இருக்குமாம் .அந்த நேரத்தில் அங்கே கடந்து போவோர் மேல் பட்டால் அதிர்ஷ்டம் செய்தவர்களாக கருதபடுவார்களாம் .நண்பர்கள் செமையாக கலாய்த்து சிரித்தார்கள் .அடுத்த சில நிமிடத்தில் இன்னொரு சம்பவம் .........!!!அது ஒரு உர்ரங்குட்டன் குரங்கு வடிவில் வந்தது .அது பற்றி அடுத்த 6 ம்  பதிவில் தொடருகிறேன்  .......!

Saturday, April 5, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்.(part -4)









சபாரி  உலகம் என்ற அந்த ஜூ -ல் பொழுதுபோக்கும் நிறைய உண்டு .அதில் ஒன்று கூண்டில் ஒரு மங்கை நடனம் ஆடியபடி இருப்பாள் .ஒரு பந்தை எரிந்து சுவிச் ஆன் செய்தால் நனைந்தபடி வந்து பரிசு தருவாள் .போட்டிக்கு 100 பாத் கட்டணம் .மூன்று  வாய்ப்பு  தரப்படும் .செம என்ஜாய்மென்ட் .அதோடு விட்டார்களா ....எங்கள் குரூப் மெம்பர் 3 பேர் அங்கேயே ஒரு குத்தாட்டம் போட்டு அங்கிருந்தவர்களை எல்லாம் குதுகலபடுத்தி  விட்டார்கள் . அங்கிருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர் . அந்த நாட்டு சிறப்பேஅது தான் .வந்த வெளிநாட்டு விருந்தினர்களின்  மகிழ்வை முக்கியம் என கருதுகிறார்கள் .பட்டையா  சிட்டி இல் ஓடும் கார்கள் ,லாரிகள்  ஹாரன்  அதிகபட்சம் use பண்ணுவதில்லை .கேட்டால்  எங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளு க்கு தொந்தரவு கொடுக்க விரும்புவதில்லை என்று பதில் வந்தது .(இந்திய டிரைவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ). ஒரே ஒரு பயணி இந்த விளையாட்டில் வெற்றி பெற்றார் .உடனே அந்த பெண்ணின் மேல் தண்ணீர் கொட்டி நனைத்தது .தண்ணீர் சொட்ட சொட்ட வந்து பரிசு கொடுத்து விட்டு சென்றாள் .அந்த இனிமையான டான்ஸ்  காட்சி  உங்கள் பார்வைக்கு இங்கே.அடுத்து ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு எனக்கு நடந்தது ...அது அடுத்த பதிவில் ...!!!!

Thursday, April 3, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்.....(part 3)


                                                             நண்பர்கள்  ஏற்கனவே கூறியபடி 2 ஸ்காட்ச் ப்ளீஸ் என்று கேட்டு வாங்கி  அவர்களிடம் கொடுத்துவிட்டு (அவ்ளோ நல்லவனாடா  நீ என நினைக்க வேண்டாம் ) ஒரு டின் பீர் உடன் செட்டில் ஆனேன் .ஆனால்  இரண்டாம் முறை (2011) தாய்  சென்றபோது இதெற்கு வாய்ப்பே  இல்லாமல் போனது.வோட்கா ப்ளீஸ் என்றதும் க்ளாசில்  sprite  உடன் கலந்தே கொடுத்தார்கள் .(நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் ..ஹவ்வ்வ்வவ்வ்வ் ).
செம ஜாலியான 2.30 மணி நேர பயணம் ...அருமையான காலை உணவு  வந்தது .அந்தமான் தீவின் மேலே பறந்த போது  அதன் அழகை பார்க்க கோடி கண் வேண்டும் .முதல் முறை வெளிநாட்டில் கால்பதிக்க போகிறோம் என்ற நினைவே சுகமாய் இருந்தது .ஆனாலும் நல்லபடியா லேன்ட் ஆகனுமே என்று சாமிய கும்பிடாமல் இல்லை (பயத்த ஒத்துகனும்ள ).

                                                                        எப்படி நான் லேன்டிங் ஆனேன் .....வீடியோ  பாத்துட்டு கமென்ட் கொடுங்க  ஓகே? .தாய்லாந்த் ஏர்போர்ட் சிறந்த வகையில் அமைந்து இருந்தது .நடக்கவேண்டாம் முக்கிய இடங்களுக்கு எஸ்கலேட்டர் வசதி ....நின்று கொண்டே பொய் சேர்ந்து விடலாம் .


                                 அங்கு போய்  சேர்ந்ததும் சுங்க செக்கப் முடிந்து ,சரியாக நமக்கு ஒதுக்கப்பட்ட போர்டிங் ESCALETER  சென்று நமது TRAVEL பேக்ஸ் COLLECT  செய்துவிட்டு விசா பெர்மிட்டுக்கு ஓட வேண்டியது தான் .விசா வாங்கி வெளியே வந்து பார்த்தால் எங்கள் டீம் பெயருடன் சூப்பரான DELUX ஏசி கார் பிரமாண்டமாய் நின்று இருந்தது .அங்கிருந்து 2.30 மணி நேர பயணம் பட்டையா சிட்டி .புறப்பட தயார் ஆனோம் .ஒரு 3 ஸ்டார் ஹோட்டல்  ரூம் போய் சேர்ந்தோம் (2011-ல்  5 ஸ்டார் ஹோட்டல் வசதி கிடைக்கபெற்றேன் .அந்த சுக அனுபவமே தனிதான் ). சற்று ஓய்வு எடுத்து முதல் ப்ரோக்ராம் பார்க்க புறப்பட்டோம் .அது......வன விலங்குகள் வாழும் ஜு .
அங்கேயும் பல விளையாட்டுகளும்,கிளு கிளுப்பு அனுபவங்களும் நிறைய உண்டு......அது  அடுத்த என் ( 4 ம்) பதிவில் .......!!!