என் முதல் விமான பயணம் பல வருடங்கள் முன் ( 9 -ம் வகுப்பு படித்த போது ) விளையாட்டாய் அமைந்தது .அறிவியல் டீச்சர் டூர் பற்றி கேட்டபோது பசங்கள் சொன்ன முதல்சாய்ஸ் கேரளா (வயசு அப்படி).அப்போது நன் கேட்ட சாதாரண கேள்வி எதுல சார் போலாம் ?(பஸ் /ட்ரைன் ) .கூட்டத்திலிருந்து ஏண்டா ஒன்ன பிளைட்லையா கூடிபோவாங்க என்றனர் .உடனே டீச்சர் ....ஏன் ப்ளைட்ல அவன் போகமுடியாதா ? இருடா கல்யாண் நான் கேட்டு சொல்றேன் என்றவர் மிக குறைந்த கட்டணத்தில் அந்த மாதமே அதை நனவாக்கினார் .35 பேர் கொண்ட குழு 3 நாள் கேரளா பயணம் போய் வந்தோம்.இதில் பெரிய காமெடி என்னன்னா ,எங்கள் தெருவே கூடி தெரு கோவிலில் சாமி கும்பிட்டு விபுதி பூசி (30 பேருக்கு மேல்) வழியனுப்பி வைத்தனர் .அதை இப்போது நினைத்தாலும் சிரி
ப்பு தான் வரும் .(அப்போது மதுரைக்கு வாரம் 2 முறை மட்டும் விமானம் வரும். ).இப்போதும் என் பள்ளி h m ரூமில் நங்கள் விமானம் முன் அமர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ பார்த்தால் பெருமையாக தெரியும் .முதல் விமான பயண அனுபவம் பயந்தபடியும் சந்தோசமாகவும் அனுபவித்தோம்.பகிர்ந்ததில் மகிழ்ச்சி !!
No comments:
Post a Comment