Thursday, May 1, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part..11


நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part..11                                                                     

கோரல்  தீவு போகும் வழியில் எனக்கு வந்த ஆப்பு தான் அண்டர் வாட்டர் ரைடு .தீவில் கடலுக்கு கீழே பிராண வாயு அணிந்து நடந்து சென்று பார்க்கும் ரைட் அது.15 பேர்  சுமார் 50 பீட் ஆழத்தில் இறக்கப்பட்டோம் .இறங்கியபின் தான்  உணர்ந்தேன் ....என்  சிலிண்டர்  இணைப்பில் கோளறு ஏற்பட்டு சப்ளை கிடைக்கவில்லை என்பது !! ஒரு சில வினாடிகளுக்கு மேல் என்னால் சமாளிக்கமுடியவில்லை. முக மூடி  ஹெல்மட் இல்உப்பு  தண்ணீர் நிரம்ப ஆரம்பித்த உடன் தான்  விபரீதம் எனக்கு புரிய ஆரம்பித்தது ........மூச்சுமுட்ட உயிர் போராட்டம் .உடனே என் கவசதிற்கும் வாயு உள்ள படகுக்கும்  உள்ள தொடர்பு இணைப்பு பைப்பை  பிடித்து ஆட்ட  ஆரம்பித்தேன் .மடக் மடக் என கடல் உப்பு தண்ணீர்  மூக்கு வழியே நுழைய ஆரம்பித்தது .அப்போது பாதுகாப்பு பணியாளர்(உடன் இருவர் வருவார்கள் ) கவனித்து படகுக்கு தகவல் அனுப்ப சில நொடி போராட்டத்துக்கு பின் ஏன் கவசத்துக்குள் பிராண வாயு புஸ்ஸ்ஸ் என்ற சப்தத்துடன் உள்ளே நுழைய.........எனக்கு உயிரும் உள்ளே நுழைந்தது .(தண்ணீல கண்டம் என்று சொல்வார்களே  அது இதுதான் போல ).அப்பாடா  பிழைத்த  வரை போதுமடா சாமி என்று படகுக்கு வந்து சேர்ந்தேன்.ஆனாலும் பிழைத்த  தைரியத்தில் கடல் அனுபவத்தை முடித்துவிட்டு தான் மேலே படகுக்கு வந்தேன் .மீன் உணவு நம் கையில் தந்தவுடன் கடல் மீன்கள் நம்மை சுற்றி மொய்க்கும் காட்சி  மெய் சிலிர்க்க வைக்கும் .பின் பரசூட் ரைட் நடக்கும் படகுக்கு அழைத்து போவார்கள் .மிக த்ரில் அனுபவம் அது .2008-ல் பயந்து போய்  நான் போகவில்லை .ஆனால் 2011-ல் துணிந்து போய்வந்தது நல்ல அனுபவம் .அது பற்றி அடுத்த பதிவு 12-ல் தொடரலாம் .

No comments:

Post a Comment