Friday, May 16, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-15)

                                                              ஜெம் பாக்டரி விசிட் முடிந்ததும் புத்தர் கோவில் புறப்பட்டோம் .தாய்லாந்தில் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடம் அது.!!!.(போதிதருமன்  சிலை  அங்கே உண்டு ).முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன புத்த  சிலை அது.3 மீட்டர் உயரம் ,5.5 டன் எடை முழுதும் தங்கம் .(பல பல  வருடங்களுக்கு முன் போர் காரணத்திற்காக மண்ணால் பூசி மறைக்கப்பட்டு இருந்தது ,சில காலங்களுக்கு பின் இடமாற்றதின்போது உடைந்ததால் தான் உள்ளே தங்க புத்தர் தெரிதந்தார் என்பது சரித்திர உண்மை..மன திருப்தியான வழிபாடு செய்து திரும்பினேன் .பூஜைகளும்  சிறப்பாக நிறைவேற்ற முடிந்தது .(அது சரி டூர்ல  இந்த நல்ல விஷயம் எல்லாம் கடைசியாதான் காண்பிபார்களோ ?) .அங்கேயே பண பரிமாற்ற வசதியும் உண்டு ,டோலேரை தாய்  பாத்தா  மாத்தி செலவு செய்ய வசதியா இருக்கும்ல !.  வெளியே வரும்போது நம் படம் பொறித்த பேஜ் கலர்புல்லா காட்டி பணம் கேட்கிறார்கள் .எப்போது நம்மை படம் பிடித்து பிரிண்ட் போட்டு பேஜ் செய்தார்களோ தெரியவில்லை .வேண்டாம் என்றாலும் வற்புறுத்தவில்லை .(75 பாத் ).பின் மிக நீ.....நீ ....நீண்ட புத்த சிலை உள்ள கோவில் நோக்கி பயணம்.சில km  இடைவெளியில் தான் .அது பற்றி எனது அடுத்த இடுகை 16-இல்  காணலாம் .

No comments:

Post a Comment