Sunday, May 18, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-17


                                    தாய்லாந்து நாட்டின் உணவு முறை நம் நாட்டை போல இல்லை .ஒவ்வொரு முறையும் உணவோடு பழம் ,ஜூஸ் போன்றவைகளை சேர்ப்பது நலம் தரும் .பெரும்பாலான வறுவல்கள் பன்றி கொழுப்பாலும் செய்யப்படலாம் (நான் வெஜ் பிரியர்கள் கவனம் ).நூடிலே முக்கிய டிபன் .அதன் வாசனை குமட்டலாம் (நான் இதில் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன் ).


                         தாய்லாந்து பயணத்தின் போது சாலையோர ஒட்டுக் கடைகளை கணிசமாக காண முடியும். வருத்த புழு பூச்சி வகைகளும் காரம் மிகுந்த உணவு பண்டங்களும் சாலையோர கடைகளில் பிரபலம். இது போக பொரித்த எலி, தவளை, பாம்பு போன்றவற்றையும் காணலாம்.பயணிகளுக்கு இது விசித்திர உணவாக இருக்கும். அந்த வியாபாரியிடம் கேட்டீர்கள் எனில் ‘விட்டமீன் விட்டமீன்’ என சொல்வான். அவற்றை சுவை பார்க்கும் பயணிகள் ‘இட்ஸ் நைஸ்’ என சொல்வதையும் காணலாம்.
                                                                   மதிய உணவோடு கெட்டி தயிர் சேர்ப்பது பல வயிற்று உபாதைகளில் இருந்து காக்கும் .இரவு உணவில் நான் ,சப்பாத்தி சேர்ப்பது நல்லது (காலை கடன் ப்ரீயா  இருக்கணும் ,பயண இடைவெளிகளில் சிரமம் இருக்ககூடாது இல்லையா?). பாதாம் பருப்பு மிளகுடன் வறுக்கப்பட்டு  பாக்கெட்டில் கிடைக்கும் .அது வாங்கி கொறிப்பது டூர் அயர்ச்சி குறைக்கும் .இனி தாய்லாந்தின் இன்னொரு atraction  பக்கமான மசாஜ்,மற்றும் பாலியல் சமாச்சாரங்கள் பற்றி அடுத்த இடுகை 18-ல்  அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment