Temple of the Reclining Buddha.
சயனத்தில் இருக்கும் மிக நீளமான புத்தர் சிலை காண இரு கண்கள் போதாது .முழு தரிசனமும் பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் .அவ்வளவு நீ ...........................ளம் !!!!!.கால் பாதம் மட்டும் 10 அடிக்கு மேல் .மொத்த உடல் சுமார் 150 அடி .கால் பதம் முழுதும் ராமாயண கதை பற்றிய சின்னங்கள் .(கோவிலை சுற்றி வர சுமார் 2 மணி நேரம் ஆகும் ).
வெளியே மற்ற சிலைகள்,சில்லறை தானம் ,பிட்சுகளுக்கு donation ..எல்லாம் உண்டு.கோவிலுக்கு வெளியே நம் ஊர் போல பிளாட்பாரம் கடைகள் நிறைய உண்டு .நினைவு பரிசு நிறைய வாங்கலாம் .பின் ஒரு ஆர்ட் காலரி போனோம் தாய்லாந்து நாட்டின் கைவினை பொருள்கள் கொட்டி கிடக்கிறது .விலையும் கொஞ்சம் பரவாயில்லை .
பின் உணவுக்கான நேரம் .முதல் முறை நான் தாய்லாந்த் சென்று வந்த போது காய்ச்சலுடன் தான் சென்னை வந்து இறங்கினேன் .காரணம் உணவு சாப்பிடும் முறை .இரண்டாம் முறை உணவு பழக்கத்தில் சிறு மாற்றம் செய்து நலமுடன் திரும்ப முடிந்தது .அது பற்றி இடுகை 17 -ல் தொடரலாம் .
No comments:
Post a Comment