நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-14)
ஜெம் பாக்டரி உள்ளே அனுமதி பெற்று நுழைந்ததும் ஒரு குட்டி ட்ராலி ரயிலில் குகைக்குள் செல்லவேண்டும் .இருட்டு,லைட் எபக்ட் ,சவுண்ட் செட் அப் மூலமாக வைரம் உருவாகும் முறையிலிருந்து தங்க நகை ஆவது வரை நேரடியாக காண முடியும் .ஒரு புது அனுபவம் அது. விற்பனை பிரிவு சென்று வைர நகைகளை வாங்கிகொள்ளலாம் .வாங்க முடியுதோ இல்லையோ ,அதனை வைர தங்க நகைகளை ஒரே இடத்தில பார்கிறதே சிலிர்ப்பான விஷயம் .வைரம் பட்டை தீட்டுவது போன்ற விசயங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.(போட்டோ எடுக்க அனுமதி கிடையாது !!). பின்னர் இந்திரா மார்க்கெட் சென்றால் சீப் அண்ட் பெஸ்ட் பொருள்கள் வாங்கலாம் .உள்ளே சுற்றி வந்தாலே 2.00 மணி நேரம் மேல் ஆகும் .பார்கைன் பண்ணி வாங்கலாம் .திறமைக்கு தகுந்த லாபம் !!!!.electranics பொருள்கள் வாங்க டோடேல் மால் ....செம கலக்கல் purchese .இந்திரா மாலில் இருந்து 10 நிமிட நடை தூரம் தான் .dvd ,ப்ளூ ரே ,3டி cd உடனுக்குடன் பதிசு செய்து தருவார்கள் .சுற்றி முடித்து வெளியே வரும்போது பதிவு செய்து முடிதிருப்பர்கள் போய் வாங்கிகொள்ளலாம் .மால் முழுதும் ஏலேக்ட்ரோனிக் பொருள்கள் பேட்டரி முதல் ரோபோட் வரை கொட்டி கிடக்கிறது .(பசங்களுக்கு எலெக்ட்ரானிக் விளையாட்டு பொருள்கள் நூற்று கணக்கில் இறைந்து கிடக்கிறது .) பெரும்பாலான purchase இங்கே முடித்துவிடுவது நல்லது .இந்திரா மால் விட்டு வெளியே வந்தால் மாலை சுற்றி 1 km அளவுக்கு பிளாட்பார கடைகள் விரிந்து கிடக்கிறது .ரசித்து ,திகைத்து,அலுத்து போகும் வரை வாங்கலாம் .........காசு கரையும் வரை !!!
No comments:
Post a Comment