Sunday, May 18, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part18.

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்- part18

                                                        தாய்லாந்து ஆசியாவின் சுவர்க்க பூமியாக விளங்கி வருகிறது.

அங்கு பணம் கொடுத்தால், பாலியல்  தொடர்பு கிடைக்கும்.  பாலியல் தொழில்  என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக இருக்கிறது.அங்கு யாரும், யாருடனும் தொடர்பில் இருக்கலாம். பாலியல் என்பது அவர்களுக்கு ஒரு தொழில். அதில் வெட்கப்பட அவர்களுக்கு எதுவும் இல்லை.அரசே சிறப்பு இலவச மருத்துவம் , செக் அப் ,பாதுகாப்பு முறைகள் ,  தருகிறது .

- நம் நாட்டில்,பெண்கள் தொழிற்சாலைகளுக்கு காலையில் வேலைக்குப் போவது போல, அங்கு, பெண்கள்
பாலியல் தொழில் செய்ய செல்கிறார்கள். பெண்களில் ஒரு பகுதியினரே அத்தொழிலில் செய்கின்றனர்.அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும், நண்பர்களும் அவர்களை வேலையிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
 பலர், அவர்கள் குடும்பத்தை விட்டு தூரமாக இருக்கிறார்கள். பலரின் குடும்பம், 'பேங்காக்' போன்ற தூரமான ஊர்களில் இருக்கிறது. இவர்கள் 'சாடோவ்', 'ஹட்ஜாய்' போன்ற ஊர்களில் வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்புகிறார்கள் .இனி தாய்லாந்து மசாஜ் பற்றி அடுத்த இடுகை-19 -யில் தொடரலாம் .

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-17


                                    தாய்லாந்து நாட்டின் உணவு முறை நம் நாட்டை போல இல்லை .ஒவ்வொரு முறையும் உணவோடு பழம் ,ஜூஸ் போன்றவைகளை சேர்ப்பது நலம் தரும் .பெரும்பாலான வறுவல்கள் பன்றி கொழுப்பாலும் செய்யப்படலாம் (நான் வெஜ் பிரியர்கள் கவனம் ).நூடிலே முக்கிய டிபன் .அதன் வாசனை குமட்டலாம் (நான் இதில் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன் ).


                         தாய்லாந்து பயணத்தின் போது சாலையோர ஒட்டுக் கடைகளை கணிசமாக காண முடியும். வருத்த புழு பூச்சி வகைகளும் காரம் மிகுந்த உணவு பண்டங்களும் சாலையோர கடைகளில் பிரபலம். இது போக பொரித்த எலி, தவளை, பாம்பு போன்றவற்றையும் காணலாம்.பயணிகளுக்கு இது விசித்திர உணவாக இருக்கும். அந்த வியாபாரியிடம் கேட்டீர்கள் எனில் ‘விட்டமீன் விட்டமீன்’ என சொல்வான். அவற்றை சுவை பார்க்கும் பயணிகள் ‘இட்ஸ் நைஸ்’ என சொல்வதையும் காணலாம்.
                                                                   மதிய உணவோடு கெட்டி தயிர் சேர்ப்பது பல வயிற்று உபாதைகளில் இருந்து காக்கும் .இரவு உணவில் நான் ,சப்பாத்தி சேர்ப்பது நல்லது (காலை கடன் ப்ரீயா  இருக்கணும் ,பயண இடைவெளிகளில் சிரமம் இருக்ககூடாது இல்லையா?). பாதாம் பருப்பு மிளகுடன் வறுக்கப்பட்டு  பாக்கெட்டில் கிடைக்கும் .அது வாங்கி கொறிப்பது டூர் அயர்ச்சி குறைக்கும் .இனி தாய்லாந்தின் இன்னொரு atraction  பக்கமான மசாஜ்,மற்றும் பாலியல் சமாச்சாரங்கள் பற்றி அடுத்த இடுகை 18-ல்  அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-16

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-16

Temple of the Reclining Buddha.

                                       சயனத்தில் இருக்கும் மிக நீளமான புத்தர்  சிலை காண இரு கண்கள் போதாது .முழு தரிசனமும் பார்ப்பது  கொஞ்சம் சிரமம் தான் .அவ்வளவு நீ ...........................ளம் !!!!!.கால் பாதம்  மட்டும் 10 அடிக்கு மேல் .மொத்த உடல் சுமார் 150 அடி .

 கால் பதம் முழுதும் ராமாயண  கதை பற்றிய சின்னங்கள் .(கோவிலை சுற்றி வர சுமார் 2 மணி நேரம் ஆகும் ).
 வெளியே  மற்ற சிலைகள்,சில்லறை தானம் ,பிட்சுகளுக்கு donation ..எல்லாம் உண்டு.கோவிலுக்கு  வெளியே நம் ஊர் போல பிளாட்பாரம் கடைகள் நிறைய உண்டு .நினைவு பரிசு நிறைய வாங்கலாம் .பின் ஒரு ஆர்ட் காலரி  போனோம் தாய்லாந்து  நாட்டின் கைவினை பொருள்கள் கொட்டி கிடக்கிறது .விலையும்  கொஞ்சம் பரவாயில்லை .



 பின் உணவுக்கான நேரம் .முதல் முறை நான் தாய்லாந்த் சென்று வந்த போது  காய்ச்சலுடன் தான் சென்னை வந்து இறங்கினேன் .காரணம் உணவு சாப்பிடும் முறை .இரண்டாம் முறை உணவு பழக்கத்தில் சிறு  மாற்றம் செய்து நலமுடன் திரும்ப முடிந்தது .அது பற்றி இடுகை 17 -ல் தொடரலாம் .

Friday, May 16, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-15)

                                                              ஜெம் பாக்டரி விசிட் முடிந்ததும் புத்தர் கோவில் புறப்பட்டோம் .தாய்லாந்தில் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடம் அது.!!!.(போதிதருமன்  சிலை  அங்கே உண்டு ).முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன புத்த  சிலை அது.3 மீட்டர் உயரம் ,5.5 டன் எடை முழுதும் தங்கம் .(பல பல  வருடங்களுக்கு முன் போர் காரணத்திற்காக மண்ணால் பூசி மறைக்கப்பட்டு இருந்தது ,சில காலங்களுக்கு பின் இடமாற்றதின்போது உடைந்ததால் தான் உள்ளே தங்க புத்தர் தெரிதந்தார் என்பது சரித்திர உண்மை..மன திருப்தியான வழிபாடு செய்து திரும்பினேன் .பூஜைகளும்  சிறப்பாக நிறைவேற்ற முடிந்தது .(அது சரி டூர்ல  இந்த நல்ல விஷயம் எல்லாம் கடைசியாதான் காண்பிபார்களோ ?) .அங்கேயே பண பரிமாற்ற வசதியும் உண்டு ,டோலேரை தாய்  பாத்தா  மாத்தி செலவு செய்ய வசதியா இருக்கும்ல !.  வெளியே வரும்போது நம் படம் பொறித்த பேஜ் கலர்புல்லா காட்டி பணம் கேட்கிறார்கள் .எப்போது நம்மை படம் பிடித்து பிரிண்ட் போட்டு பேஜ் செய்தார்களோ தெரியவில்லை .வேண்டாம் என்றாலும் வற்புறுத்தவில்லை .(75 பாத் ).பின் மிக நீ.....நீ ....நீண்ட புத்த சிலை உள்ள கோவில் நோக்கி பயணம்.சில km  இடைவெளியில் தான் .அது பற்றி எனது அடுத்த இடுகை 16-இல்  காணலாம் .

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-14)


                
                               நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-14)

                                                       ஜெம் பாக்டரி உள்ளே அனுமதி பெற்று நுழைந்ததும் ஒரு குட்டி ட்ராலி ரயிலில்   குகைக்குள் செல்லவேண்டும் .இருட்டு,லைட் எபக்ட் ,சவுண்ட்  செட் அப் மூலமாக வைரம் உருவாகும் முறையிலிருந்து தங்க நகை ஆவது வரை நேரடியாக காண முடியும் .ஒரு புது அனுபவம் அது. விற்பனை பிரிவு சென்று வைர நகைகளை வாங்கிகொள்ளலாம் .வாங்க முடியுதோ இல்லையோ ,அதனை வைர தங்க நகைகளை ஒரே இடத்தில பார்கிறதே சிலிர்ப்பான விஷயம் .வைரம் பட்டை தீட்டுவது போன்ற விசயங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு  கிடைக்கும்.(போட்டோ எடுக்க அனுமதி கிடையாது !!). பின்னர் இந்திரா மார்க்கெட் சென்றால் சீப் அண்ட் பெஸ்ட் பொருள்கள் வாங்கலாம் .உள்ளே சுற்றி வந்தாலே 2.00 மணி நேரம் மேல் ஆகும் .பார்கைன்  பண்ணி வாங்கலாம் .திறமைக்கு தகுந்த லாபம் !!!!.electranics  பொருள்கள் வாங்க டோடேல் மால் ....செம கலக்கல் purchese .இந்திரா மாலில் இருந்து 10 நிமிட நடை தூரம் தான் .dvd ,ப்ளூ ரே ,3டி cd  உடனுக்குடன் பதிசு செய்து தருவார்கள் .சுற்றி முடித்து வெளியே வரும்போது பதிவு செய்து முடிதிருப்பர்கள்  போய்  வாங்கிகொள்ளலாம் .மால் முழுதும் ஏலேக்ட்ரோனிக் பொருள்கள் பேட்டரி முதல் ரோபோட் வரை கொட்டி கிடக்கிறது .(பசங்களுக்கு எலெக்ட்ரானிக் விளையாட்டு பொருள்கள் நூற்று கணக்கில் இறைந்து கிடக்கிறது .) பெரும்பாலான purchase  இங்கே முடித்துவிடுவது நல்லது .இந்திரா மால் விட்டு வெளியே வந்தால் மாலை சுற்றி 1 km அளவுக்கு பிளாட்பார கடைகள் விரிந்து கிடக்கிறது .ரசித்து ,திகைத்து,அலுத்து போகும் வரை வாங்கலாம் .........காசு கரையும் வரை !!!






                  

Sunday, May 4, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-13)

                                         நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-13)

                                                               தாய்லாந்து அரசரின் பிரத்தியோக ஷாப்பிங் மால் அது







தி கிங் பவர் மால் .
.நமது பாஸ்போர்ட் விசா எல்லாம் சரிபார்த்து பின் அனுமதி தருவார்கள் .ஹை க்வாலிட்டி ranges  அனைத்தும் கிடைக்கும்.முக்கியமாக சாக்லேட் பிரியர்கள் ஜமாய்கலாம் .(4000-பாத்துக்கு  சாக்லேட்டே வாங்கியாச்சு செம வெரைட்டி டேஸ்ட் &க்வாலிட்டி .)எலெக்ட்ரானிக் பொருள் தவிர்த்து மற்றவை வாங்கலாம் .ஏன் என்றால் அதற்கு சீப்பாக வாங்க வேறு மால்(டோடல் மால்&இந்திரா மால் ) இருக்கிறது . (கேமரா,டிரஸ் ,பேக்ஸ் ,முக்கியமா சாக்லேட்ஸ் (!!!!!!),perfume ,jewlery ........இதுபோல நிறைய .அப்புறமா .......பிராண்டி,விஸ்கி,வோட்கா ,பீர்.......சகலமும் கொட்டி கிடக்கிறது .இங்கே .மறக்காமல் பில் வாங்கவேண்டியது அவசியம் .இந்தியா திரும்ப விமானம் புறப்படும் முன் அதற்குரிய கவுன்டரில் பிள்ளை கொடுத்து டாக்ஸ் மதிப்பை திரும்ப வாங்கிகொல்ள்ளலாம் .பில் இல்லாத மது வகைகள் ஏற் போர்ட்டில்  பறிமுதல் செய்யப்படும் ஜாக்கிரதை !!!!!!!!!!!!!. அதற்க்கு தகுந்த மாதிரி முன்னதாகவே அங்கே போக ப்ளான் பண்ண வேண்டியது அவசியம் .purchase முடிந்து ஜெம் பாக்டரி கூடிபோனார்கள் .அது பற்றி அடுத்த இடுகை 14-ல் காணலாம் .

Thursday, May 1, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம்-part12


                                                     நான் ரசித்த தாய்லாந்து  அனுபவம் 12

















         

                                                     பாரசூட் ரைட் உண்மையாக செம த்ரிலிங் .என்  முதுகில் பாரசூட் பெல்ட் கட்டபட்டு அதன் இன்னொரு முனை ஸ்டீம் போட் ஒன்றில் இணைக்கப்படும் .போட் ஸ்பீடா நகர்ந்ததும் நாம் மேலே தூக்கப்பட்டு மிக உயரமாக (பட்டம் பறப்பது போல )நாம் பறந்து கொண்டு இருப்போம் .10.00 நிமிட  அனுபவம் ...வாழ்கையில் மறக்கமுடியாததாக மாறும் .பின் அதே போட்டில் லாவகமாக இறக்கபடுவோம் .தலை சுற்றி தடுமாறுவோர் பத்துக்கு ஆறு பேர் ......இதய பலவீனம் உள்ளவர்கள் போக வேண்டாம் .தைரிய சாலிகளுக்கு நல்ல த்ரில் அனுபவம் கிடைக்கும்.
                                                                 பாரசூட் ரைட் முடிந்ததும் அந்த தீவை வந்து அடைந்தோம் .சூப்பர் location !!! .அங்கு ஸ்டீம் ரைடு .மோட்டார் ஸ்டீம் பைக் ரைடு ,பலூன் ஸ்டீம் ரைடு  என கலக்கலாம்.பாதுகாப்பான வலையத்துக்குள் கடலில் நீந்தலாம் .மீன் உணவுடன் பீர் சாபிடலாம் .கடலில் ஓடி விளையாடலாம் ,விளையாடும் கலக்கல் பெண்களை ,ஆண்களை ,குழந்தைகளை ,குடை நிழலில் அமர்ந்து கண் குளிர(shame  shame  puppy  shame !!!!! )ரசிக்கலாம் .அ க்டோபசி,நண்டு ,மீன் ,grilled  செய்து சாப்பிடலாம் .(அக்டோபசி parbique  சூப்பர் taste  போங்கள் !!!).மாலை  3 .00 மணி வரை அங்கே தான் .மறக்கமுடியாத தருணங்கள் அது.பின் மதிய உணவுக்கு பின் தாய்லாந்து  அரசரின் பிரத்தியோக வரிவிலக்கு பெற்ற ஷாபிங் மால் பயணம்.அது பற்றி அடுத்த இடுகை 13- ல் .பார்க்கலாம் .

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part..11


நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part..11                                                                     

கோரல்  தீவு போகும் வழியில் எனக்கு வந்த ஆப்பு தான் அண்டர் வாட்டர் ரைடு .தீவில் கடலுக்கு கீழே பிராண வாயு அணிந்து நடந்து சென்று பார்க்கும் ரைட் அது.15 பேர்  சுமார் 50 பீட் ஆழத்தில் இறக்கப்பட்டோம் .இறங்கியபின் தான்  உணர்ந்தேன் ....என்  சிலிண்டர்  இணைப்பில் கோளறு ஏற்பட்டு சப்ளை கிடைக்கவில்லை என்பது !! ஒரு சில வினாடிகளுக்கு மேல் என்னால் சமாளிக்கமுடியவில்லை. முக மூடி  ஹெல்மட் இல்உப்பு  தண்ணீர் நிரம்ப ஆரம்பித்த உடன் தான்  விபரீதம் எனக்கு புரிய ஆரம்பித்தது ........மூச்சுமுட்ட உயிர் போராட்டம் .உடனே என் கவசதிற்கும் வாயு உள்ள படகுக்கும்  உள்ள தொடர்பு இணைப்பு பைப்பை  பிடித்து ஆட்ட  ஆரம்பித்தேன் .மடக் மடக் என கடல் உப்பு தண்ணீர்  மூக்கு வழியே நுழைய ஆரம்பித்தது .அப்போது பாதுகாப்பு பணியாளர்(உடன் இருவர் வருவார்கள் ) கவனித்து படகுக்கு தகவல் அனுப்ப சில நொடி போராட்டத்துக்கு பின் ஏன் கவசத்துக்குள் பிராண வாயு புஸ்ஸ்ஸ் என்ற சப்தத்துடன் உள்ளே நுழைய.........எனக்கு உயிரும் உள்ளே நுழைந்தது .(தண்ணீல கண்டம் என்று சொல்வார்களே  அது இதுதான் போல ).அப்பாடா  பிழைத்த  வரை போதுமடா சாமி என்று படகுக்கு வந்து சேர்ந்தேன்.ஆனாலும் பிழைத்த  தைரியத்தில் கடல் அனுபவத்தை முடித்துவிட்டு தான் மேலே படகுக்கு வந்தேன் .மீன் உணவு நம் கையில் தந்தவுடன் கடல் மீன்கள் நம்மை சுற்றி மொய்க்கும் காட்சி  மெய் சிலிர்க்க வைக்கும் .பின் பரசூட் ரைட் நடக்கும் படகுக்கு அழைத்து போவார்கள் .மிக த்ரில் அனுபவம் அது .2008-ல் பயந்து போய்  நான் போகவில்லை .ஆனால் 2011-ல் துணிந்து போய்வந்தது நல்ல அனுபவம் .அது பற்றி அடுத்த பதிவு 12-ல் தொடரலாம் .