Tuesday, June 27, 2017

My dp families

https://goo.gl/photos/pZpRonmMwGagqYQh8

Sunday, June 1, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-20

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-20

                                                 இதுவரை எனது  தாய்லாந்து அனுபவங்களை பொறுமையுடன்   படித்து ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல .உங்கள் வருங்கால பயணத்திற்கு இது உதவும் என்று நம்புகிறேன்.
                                     ஒவ்வொரு நாட்டிற்க்கும் ஒரு கலாச்சாரம், பண்பாடு ,மாறுபடும் .அதுபோல தாய்லாந்து ஒரு மாறுபட்ட கலாச்சார அமைப்பு கொண்டதுதான் .அந்த கலாச்சார அனுபவத்தை  நம் இந்தியா உடன் ஒப்பிட்டு ஒரு சில வாக்கியங்களில் சொன்னால் ........."".நம் இந்தியா எல்லாவற்றிற்கும் மேல் தங்கம் போல சிறந்தது .....அதில் நம் தமிழ்நாடு சொக்க தங்கம் ........அதிலும்  நம் சவுத் தமிழ்நாடு புடம் போட்ட தங்கம் ......அதிலும்  நம் மதுரை ,திருநெல்வேலி ,தேனீ,தூத்துக்குடி,ராம்நாடு ...போன்ற தெற்கு கோடி தமிழ்நாடு பட்டை தீட்டி பளபளக்கும் தங்கம் .""என்பதை உணர முடியும் .ஆனாலும் மற்ற நாடுகளுக்கு சென்று வரும்போதுதான் நமக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கபெறும் .
                                            உணவுக்கு பின் இரவு இந்தியா  நோக்கி புறப்பட்டோம் .விமான அலுவலகத்தில் தாய் பாத் ஐ நம்  இந்திய பணமாக மாற்றிக் கொள்ளலாம் .taxfree  refund  சமாச்சரங்களை முடித்து  விமானத்தில் அமர்ந்து பயணத்தின் இறுதி "பார்ட்டி "ஐ துவக்கி முடித்து மனநிறைவுடன் .காலையில் இந்தியா  வந்து இறங்கினோம் . இந்திய மண்ணை தொட்டதும் மனதின் உள்ளே ஒரு பரவசம் ஏற்பட்டது என்பது முற்றிலும் உண்மை..   இந்த "20 பாகங்கள் "நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்களில் ஏதும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து உங்களின் கமென்ட்களை தாருங்கள் .மிக்க நன்றி .
அன்புடன் ,
L.கல்யாணராஜன்.,M .A .,
E -MAIL : kalyan8567@gmail .com
PH:: 9942264426 .
மதுரை .14.
                                                           (முற்றும் )

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part -19


நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part-19

                                                                தாய்லாந்து  மசாஜ் மிக பிரசித்தம் .உண்மையான தாய்  மசாஜ் நம் அயர்ச்சிக்கு சிறந்த மருந்து !!.(சுமார் 300 பாத் திலிருந்து ஆரம்பம் ).ஆனால் ..........கவனம்  உங்கள் கவனம் சிதறடிக்க படலாம் .அல்லது பாலியலுக்கு தூண்டப்படலாம் .வேண்டாம் என மறுக்கும் பக்குவம் வேண்டும் .
                                                 ’நுஅட் போரான்’ என்று தாய் மொழியில் அழைக்கப்படும் மசாஜ்க்கு அர்த்தம் ‘பழமையான வகையில் அழுத்தம் தருவது’.பாரம்பரியமிக்க தாய் மசாஜ் தரையிலோ பாயிலோ படுக்க வைத்து செய்யப்படுவது. எண்ணை தடவ மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எண்ணை இல்லாமல் மசாஜ் இல்லை என்றாகிவிட்டது. ’பாரம்பரியமிக்க தாய் மசாஜ்’ என்று சொல்லிவிட்டு கையில் எண்ணையை எடுத்தால் நம்பாதீர்கள்!
                                   உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை   சுளுக்கெடுத்து விடும் தாய் மசாஜ் உடலுக்கு மிகவும் நல்லதாம்.  இப்படி தான் மசாஜ் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கி ’வாட் போ’ கோயிலில் வைத்திருக்கிறார்கள்.அது தான்  தாய்  மசாஜ்.மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று ’நங் நங்’ என்று உடலில் குத்தி உதைத்து ஒரு வழி செய்யும் டுபாகூர் மசாஜ் போலல்லாமல், தாய் மசாஜ் ஒரு வித இசை லயத்துடன் செய்யப்படுகிறது.இப்போது தாய் மசாஜ் என்றால் அதனுடைய

பாரம்பரிய பெயரை இழந்து, ‘பலான’ மேட்டர் என்று மருவிவிட்டது கொடுமை தான்!
                                                         200 பாட் மட்டும் தான் என்று சொல்லி உள்ளே நுழைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மசாஜ், இந்த மசாஜ் என்று ரூட் விட்டு நாம் விடும் ஜொள்ளின் அளவைப் பொறுத்து பணத்தை உருவி விடுவார்கள். அதே போல மசாஜ் செய்யும் சிறிய அறையினுள் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போதே சத்தம் போடாமல் நம் பாக்கெட்டினுள் கை விட்டு பணத்தை லவட்டி விடும் சம்பவங்களும் அதிகம். எனவே இந்த மாதிரியான ஏரியாக்களுக்கு போகும் போது பாக்கெட்டில் அதிகம் பணம் எடுத்துச் செல்லாமல் போவது பணத்துக்கும், மனதுக்கும் இதம்!
                                               தாய்லாந்து உலக அளவில் பரபரப்பாக பேசப்படுவதற்கு இந்த மசாஜ் செண்டர்களின் பங்கு மகத்தானது. நம்மூரிலும் பல ‘தாய்’ மசாஜ் செண்டர்கள் உள்ளன.இனி மேலும் பல தாய்லாந்து  பற்றிய செய்திகளை இடுகை -20 இல் பேசிவிட்டு இந்தியா  புறப்படுவோம் .

Sunday, May 18, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part18.

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்- part18

                                                        தாய்லாந்து ஆசியாவின் சுவர்க்க பூமியாக விளங்கி வருகிறது.

அங்கு பணம் கொடுத்தால், பாலியல்  தொடர்பு கிடைக்கும்.  பாலியல் தொழில்  என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக இருக்கிறது.அங்கு யாரும், யாருடனும் தொடர்பில் இருக்கலாம். பாலியல் என்பது அவர்களுக்கு ஒரு தொழில். அதில் வெட்கப்பட அவர்களுக்கு எதுவும் இல்லை.அரசே சிறப்பு இலவச மருத்துவம் , செக் அப் ,பாதுகாப்பு முறைகள் ,  தருகிறது .

- நம் நாட்டில்,பெண்கள் தொழிற்சாலைகளுக்கு காலையில் வேலைக்குப் போவது போல, அங்கு, பெண்கள்
பாலியல் தொழில் செய்ய செல்கிறார்கள். பெண்களில் ஒரு பகுதியினரே அத்தொழிலில் செய்கின்றனர்.அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும், நண்பர்களும் அவர்களை வேலையிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
 பலர், அவர்கள் குடும்பத்தை விட்டு தூரமாக இருக்கிறார்கள். பலரின் குடும்பம், 'பேங்காக்' போன்ற தூரமான ஊர்களில் இருக்கிறது. இவர்கள் 'சாடோவ்', 'ஹட்ஜாய்' போன்ற ஊர்களில் வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்புகிறார்கள் .இனி தாய்லாந்து மசாஜ் பற்றி அடுத்த இடுகை-19 -யில் தொடரலாம் .

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-17


                                    தாய்லாந்து நாட்டின் உணவு முறை நம் நாட்டை போல இல்லை .ஒவ்வொரு முறையும் உணவோடு பழம் ,ஜூஸ் போன்றவைகளை சேர்ப்பது நலம் தரும் .பெரும்பாலான வறுவல்கள் பன்றி கொழுப்பாலும் செய்யப்படலாம் (நான் வெஜ் பிரியர்கள் கவனம் ).நூடிலே முக்கிய டிபன் .அதன் வாசனை குமட்டலாம் (நான் இதில் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன் ).


                         தாய்லாந்து பயணத்தின் போது சாலையோர ஒட்டுக் கடைகளை கணிசமாக காண முடியும். வருத்த புழு பூச்சி வகைகளும் காரம் மிகுந்த உணவு பண்டங்களும் சாலையோர கடைகளில் பிரபலம். இது போக பொரித்த எலி, தவளை, பாம்பு போன்றவற்றையும் காணலாம்.பயணிகளுக்கு இது விசித்திர உணவாக இருக்கும். அந்த வியாபாரியிடம் கேட்டீர்கள் எனில் ‘விட்டமீன் விட்டமீன்’ என சொல்வான். அவற்றை சுவை பார்க்கும் பயணிகள் ‘இட்ஸ் நைஸ்’ என சொல்வதையும் காணலாம்.
                                                                   மதிய உணவோடு கெட்டி தயிர் சேர்ப்பது பல வயிற்று உபாதைகளில் இருந்து காக்கும் .இரவு உணவில் நான் ,சப்பாத்தி சேர்ப்பது நல்லது (காலை கடன் ப்ரீயா  இருக்கணும் ,பயண இடைவெளிகளில் சிரமம் இருக்ககூடாது இல்லையா?). பாதாம் பருப்பு மிளகுடன் வறுக்கப்பட்டு  பாக்கெட்டில் கிடைக்கும் .அது வாங்கி கொறிப்பது டூர் அயர்ச்சி குறைக்கும் .இனி தாய்லாந்தின் இன்னொரு atraction  பக்கமான மசாஜ்,மற்றும் பாலியல் சமாச்சாரங்கள் பற்றி அடுத்த இடுகை 18-ல்  அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-16

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் part-16

Temple of the Reclining Buddha.

                                       சயனத்தில் இருக்கும் மிக நீளமான புத்தர்  சிலை காண இரு கண்கள் போதாது .முழு தரிசனமும் பார்ப்பது  கொஞ்சம் சிரமம் தான் .அவ்வளவு நீ ...........................ளம் !!!!!.கால் பாதம்  மட்டும் 10 அடிக்கு மேல் .மொத்த உடல் சுமார் 150 அடி .

 கால் பதம் முழுதும் ராமாயண  கதை பற்றிய சின்னங்கள் .(கோவிலை சுற்றி வர சுமார் 2 மணி நேரம் ஆகும் ).
 வெளியே  மற்ற சிலைகள்,சில்லறை தானம் ,பிட்சுகளுக்கு donation ..எல்லாம் உண்டு.கோவிலுக்கு  வெளியே நம் ஊர் போல பிளாட்பாரம் கடைகள் நிறைய உண்டு .நினைவு பரிசு நிறைய வாங்கலாம் .பின் ஒரு ஆர்ட் காலரி  போனோம் தாய்லாந்து  நாட்டின் கைவினை பொருள்கள் கொட்டி கிடக்கிறது .விலையும்  கொஞ்சம் பரவாயில்லை .



 பின் உணவுக்கான நேரம் .முதல் முறை நான் தாய்லாந்த் சென்று வந்த போது  காய்ச்சலுடன் தான் சென்னை வந்து இறங்கினேன் .காரணம் உணவு சாப்பிடும் முறை .இரண்டாம் முறை உணவு பழக்கத்தில் சிறு  மாற்றம் செய்து நலமுடன் திரும்ப முடிந்தது .அது பற்றி இடுகை 17 -ல் தொடரலாம் .

Friday, May 16, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவம் (part-15)

                                                              ஜெம் பாக்டரி விசிட் முடிந்ததும் புத்தர் கோவில் புறப்பட்டோம் .தாய்லாந்தில் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடம் அது.!!!.(போதிதருமன்  சிலை  அங்கே உண்டு ).முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன புத்த  சிலை அது.3 மீட்டர் உயரம் ,5.5 டன் எடை முழுதும் தங்கம் .(பல பல  வருடங்களுக்கு முன் போர் காரணத்திற்காக மண்ணால் பூசி மறைக்கப்பட்டு இருந்தது ,சில காலங்களுக்கு பின் இடமாற்றதின்போது உடைந்ததால் தான் உள்ளே தங்க புத்தர் தெரிதந்தார் என்பது சரித்திர உண்மை..மன திருப்தியான வழிபாடு செய்து திரும்பினேன் .பூஜைகளும்  சிறப்பாக நிறைவேற்ற முடிந்தது .(அது சரி டூர்ல  இந்த நல்ல விஷயம் எல்லாம் கடைசியாதான் காண்பிபார்களோ ?) .அங்கேயே பண பரிமாற்ற வசதியும் உண்டு ,டோலேரை தாய்  பாத்தா  மாத்தி செலவு செய்ய வசதியா இருக்கும்ல !.  வெளியே வரும்போது நம் படம் பொறித்த பேஜ் கலர்புல்லா காட்டி பணம் கேட்கிறார்கள் .எப்போது நம்மை படம் பிடித்து பிரிண்ட் போட்டு பேஜ் செய்தார்களோ தெரியவில்லை .வேண்டாம் என்றாலும் வற்புறுத்தவில்லை .(75 பாத் ).பின் மிக நீ.....நீ ....நீண்ட புத்த சிலை உள்ள கோவில் நோக்கி பயணம்.சில km  இடைவெளியில் தான் .அது பற்றி எனது அடுத்த இடுகை 16-இல்  காணலாம் .