Sunday, June 1, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part -19


நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part-19

                                                                தாய்லாந்து  மசாஜ் மிக பிரசித்தம் .உண்மையான தாய்  மசாஜ் நம் அயர்ச்சிக்கு சிறந்த மருந்து !!.(சுமார் 300 பாத் திலிருந்து ஆரம்பம் ).ஆனால் ..........கவனம்  உங்கள் கவனம் சிதறடிக்க படலாம் .அல்லது பாலியலுக்கு தூண்டப்படலாம் .வேண்டாம் என மறுக்கும் பக்குவம் வேண்டும் .
                                                 ’நுஅட் போரான்’ என்று தாய் மொழியில் அழைக்கப்படும் மசாஜ்க்கு அர்த்தம் ‘பழமையான வகையில் அழுத்தம் தருவது’.பாரம்பரியமிக்க தாய் மசாஜ் தரையிலோ பாயிலோ படுக்க வைத்து செய்யப்படுவது. எண்ணை தடவ மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எண்ணை இல்லாமல் மசாஜ் இல்லை என்றாகிவிட்டது. ’பாரம்பரியமிக்க தாய் மசாஜ்’ என்று சொல்லிவிட்டு கையில் எண்ணையை எடுத்தால் நம்பாதீர்கள்!
                                   உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை   சுளுக்கெடுத்து விடும் தாய் மசாஜ் உடலுக்கு மிகவும் நல்லதாம்.  இப்படி தான் மசாஜ் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கி ’வாட் போ’ கோயிலில் வைத்திருக்கிறார்கள்.அது தான்  தாய்  மசாஜ்.மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று ’நங் நங்’ என்று உடலில் குத்தி உதைத்து ஒரு வழி செய்யும் டுபாகூர் மசாஜ் போலல்லாமல், தாய் மசாஜ் ஒரு வித இசை லயத்துடன் செய்யப்படுகிறது.இப்போது தாய் மசாஜ் என்றால் அதனுடைய

பாரம்பரிய பெயரை இழந்து, ‘பலான’ மேட்டர் என்று மருவிவிட்டது கொடுமை தான்!
                                                         200 பாட் மட்டும் தான் என்று சொல்லி உள்ளே நுழைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மசாஜ், இந்த மசாஜ் என்று ரூட் விட்டு நாம் விடும் ஜொள்ளின் அளவைப் பொறுத்து பணத்தை உருவி விடுவார்கள். அதே போல மசாஜ் செய்யும் சிறிய அறையினுள் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போதே சத்தம் போடாமல் நம் பாக்கெட்டினுள் கை விட்டு பணத்தை லவட்டி விடும் சம்பவங்களும் அதிகம். எனவே இந்த மாதிரியான ஏரியாக்களுக்கு போகும் போது பாக்கெட்டில் அதிகம் பணம் எடுத்துச் செல்லாமல் போவது பணத்துக்கும், மனதுக்கும் இதம்!
                                               தாய்லாந்து உலக அளவில் பரபரப்பாக பேசப்படுவதற்கு இந்த மசாஜ் செண்டர்களின் பங்கு மகத்தானது. நம்மூரிலும் பல ‘தாய்’ மசாஜ் செண்டர்கள் உள்ளன.இனி மேலும் பல தாய்லாந்து  பற்றிய செய்திகளை இடுகை -20 இல் பேசிவிட்டு இந்தியா  புறப்படுவோம் .

No comments:

Post a Comment