Saturday, January 25, 2014

தாய்லாந்து திரில் அனுபவம் .... தொடர்ச்சி

                 கடலுக்கு அடியில் ப்ரான ன வாயு தடங்களில்  தவித்த ( பார்க்க :இடுகை 2... நான்  ரசித்த தருணங்கள் )நிகழ்வு முடிந்து கரைக்கு பயணமானோம் .விதி அங்கேயும் விளையாடியது .பாதி  வழியே கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது .படகு அங்கும் இங்கும் அலகலிக்கபட்டது .ஏன் இப்படி என தெரியவில்லை .லைப் ஜாக்கெட் போடும்படி அறிவுருத்தப்பட்டோம் .லைப் ஜாகெட்  போட்டு பாடகில் இருந்த கம்பியை பிடித்துகொண்டு சமாளித்தோம்   .5 நிமிட போராட்டத்துக்குபின் கடல் அமைதியானது.ஒரு வழியாக கரை வந்து சேர்ந்தோம் .அன்று இரவு விமானத்தில் புறப்பட்டு சென்னை  வந்து சேர்ந்தோம் .காலை  நியூஸ் பேப்பர்  பார்த்தபின்தான் தெரிந்தது சீனா நிலநடுக்கம் 10000 நபர்களுக்கு மேல் பலியானார்கள் .அது தாய்லாந்து வரை பரவியதாகவும் ,அதன் பாதிப்பாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதாக அறிந்தோம்.த்ரில்லிங்கான ஒரு அன்பவம் ஏன் முதல் வெளிநாட்டு பயணத்தில் நடந்ததை பகிர்ந்ததில் மகிழ்ச்சி . (நிலநடுக்கம் நடுகடலில் அனுபவித்தபின் உடன் எடுத்த படங்கள் இங்கே.......!

.

Friday, January 24, 2014

தாய்லாந்து திரில் அனுபவம்

                                  என்  முதல் தாய்லாந்து  பயணம் அது.அன்று ஒரு தீவில் கடலுக்கு கீழே பிராண வாயு அணிந்து நடந்து சென்று பார்க்கும் ரைட் அது.15 பேர்  சுமார் 50 பீட் ஆழத்தில் இறக்கப்பட்டோம் .இறங்கியபின் தான்  உணர்ந்தேன் ....என்  சிலிண்டர்  இணைப்பில் கோளறு ஏற்பட்டு சப்ளை கிடைக்கவில்லை என்பது !! ஒரு சில வினாடிகளுக்கு மேல் என்னால் சமாளிக்கமுடியவில்லை. முக மூடி  ஹெல்மட் இல்உப்பு  தண்ணீர் நிரம்ப ஆரம்பித்த உடன் தான்  விபரீதம் எனக்கு புரிய ஆரம்பித்தது ........மூச்சுமுட்ட உயிர் போராட்டம் .உடனே என் கவசதிற்கும் வாயு உள்ள படகுக்கும்  உள்ள தொடர்பு இணைப்பு பைப்பை  பிடித்து ஆட்ட  ஆரம்பித்தேன் .மடக் மடக் என கடல் உப்பு தண்ணீர் வை மூக்கு வழியே நுழைய ஆரம்பித்தது .அப்போது பாதுகாப்பு பணியாளர்(உடன் இருவர் வருவார்கள் ) கவனித்து படகுக்கு தகவல் அனுப்ப சில நொடி போராட்டத்துக்கு பின் ஏன் கவசத்துக்குள் பிராண வாயு புஸ்ஸ்ஸ் என்ற சப்தத்துடன் உள்ளே நுழைய.........எனக்கு உயிரும் உள்ளே நுழைந்தது .(தண்ணீல கண்டம் என்று சொல்வார்களே  அது இதுதான் போல ).அப்பாடா  பிழைத்த  வரை போதுமட சாமி என்று படகுக்கு வந்து சேர்ந்தேன்.ஆனாலும் பிழைத்த  தைரியத்தில் கடல் அனுபவத்தை முடித்துவிட்டு தான் மேலே படகுக்கு வந்தேன் .மறக்கமுடியாத ஒரு தருணம் அது .பகிர்ந்ததில் மகிழ்ச்சி .

Thursday, January 23, 2014

.நான் ரசித்த தருணங்கள் ........(1)

நான் ரசித்த தருணங்கள் .....என்  முதல் நெடுந்தூர 10 நாள் டூர் ....மதுரை-சென்னை -டெல்லி -சிம்லா -ஹரித்துவார் -ரிஷிகேஷ் -டெல்லி-சென்னை -மதுரை .நானும் என்  நண்பன் அசோக்கும் டூர் ப்ளான் போட்டு கடும் வீட்டு  எதிர்ப்பை சமாளித்து (வயசான காலத்துல போகவேண்டிய எடத்துக்கு இந்த வயசுல தேவையா? அதுவும்  இரண்டுபேர் மட்டும் தனியாக ...!) கிளம்ப நம்பிக்கையுடன் தயாரானோம் .எங்களது இந்த அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்தால் உபயோகமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன் .எல்லாவித கருத்துக்களையும்  வரவேற்கிறேன் .



எங்களது குடும்பதினரின் வாழ்த்துகளுடன் அன்று தொடங்கியது எனது பயணம் .எனது அனுபவங்கள் உங்களுக்கு ....பயனுள்ளதாய் அமையட்டும்.......