என் பிரியமானவளுக்கு.....!
வலிகள் சுமந்த என் வாழ்க்கைக்குஉன் வார்த்தைகளால் ஆறுதல் தந்தவனள் நீ....!
என் புன்னகையை மட்டுமே இரசிப்பவர்கள் மத்தியில்
அதன்பின்னே புதைந்துகிடக்கும்
வலிகளையும் உணர்ந்தவள் நீ....!
சாத்தியமில்லா விடயங்களில் சற்றேனும் நம்பிக்கையற்ற நான்...
உரிமையில்லா உன்னை உணர்வுகளால்
நேசிக்கிறேன்....!
இயற்கையின் நியதியில்
இறைவனின் விளையாட்டில்
இணையாத இருகோடுகளாய்
நீயும் நானும்.....!
இருந்தும் உன்னை நேசம்செய்தபடி
சுவாசங்களில் உன்னை நிறைத்தபடி
சலனமில்லாமல் இக்கணமே
சாகத்தோன்றுகிறது எனக்கு....!
உன்னவன் ...!!!